பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 81. இந்த அக்கிரமச் சிறையிலிருந்து உம்மை விடுவிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் வெளியில் நடந்து கொண்டிருக்கின்றன. விவரங்களுக்கு அடுத்த கடிதத்தை எதிர்பார்க்கவும். மறுமொழி எழுதுவதற்காக இத்துடன் ஒரு பென்சிலும் துண்டுக் காகிதமும் வருகிறது. இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தபின் கிழித்து விளக்கில் கொளுத்திக் கரியாக்கிவிடவும்.

-என்று எழுதப்பட்டிருந்த துண்டுக் காகிதத்தைப் படித்த வுடனே கலியாணசுந்தரத்தின் மனதில் இன்பமும் துன்பமும் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் எழுந்து வதைக்கலாயின. தன்னை விடுவிக்க எத்தனிப்பவர்கள் யாராக இருக்கலாம் என்ற பெருத்த சந்தேகம் எழுந்தது. ஒருவேளை ஷண்முகவடிவு தான் குற்றமற்றவன் என்பதை அதன் பின்னால் எப்படியோ தெரிந்து கொண்டு தன்னை விடுவிப்பதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாளோ, அப்படி இருந்தாலும், தான் அடைபட்டி ருக்கும் சிறைச்சாலையின் ஜன்னல் வழியாக அந்தக் கடிதத்தை உள்ளே போட அவளால் எப்படி முடிந்திருக்கும், ஒருவேளை அவள் அந்தச் சிறைச்சாலையிலுள்ள சிப்பந்திகளுள் யாரை யாவது தனக்கு அனுகூலமாகச் சேர்த்துக் கொண்டு அவர் மூலமாக அந்தக் கடிதத்தை அனுப்பி இருப்பாளோ, அப்படி அனுப்பியிருந்தால், அந்த மனிதர்கடிதத்தை நேரில் கொணர்ந்து தன்னிடம் கொடுக்காவிட்டாலும், ஜன்னலிற்கு அப்பால் நின்றபடிதன்னிடம் ஏன் கொடுத்திருக்கக்கூடாது. அதுவுமன்றி, அந்த விஷயத்தில் அவள் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒரு குறிப்பாவது அந்தக் கடிதத்தில் ஏன் காட்டி இருக்கக் கூடாது என்று அவன் பலவாறு சிந்திக்க, அந்த ரகசிய ஏற்பாட்டில் ஷண்முகவடிவு சம்பந்தப்பட்டிருக்க மாட்டாள் என்ற எண்ணமே அவனது மனதில் மேலோங்கி நின்றது. ஆகவே, தன்னைச் சிறைப்படுத்தித்தன் மனவுறுதியைக்கலைக்க முயன்ற துஷ்டர்களானஅம்மாளு, தனம், அபிராமி ஆகிய மூன்று தாதிப் பெண்களும் மறுபடி ஏதோ சூழ்ச்சி செய்து தங்களது மாயவலையை விரிக்கிறார்கள் என்றே அவன் எண்ணிக்