பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 85 தேறாமல் இளைத்துக் கொண்டே வருகிறதாம். நீர் அவளிடம் போய்ச் சேர்ந்தால் உம்முடைய உடம்பு பழைய மாதிரி தளிர்த்துப் போய் விடுமாம். ஆகையால், உம்மை உடனே தன்வசம் ஒப்புவிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறாள். போலீஸார் எந்த வேளையில் வந்து பார்த்தாலும் உம்மை ஆஜர்ப்படுத்துவதாகவும் அவள் ஒப்புக் கொள்கிறாள். அவளுடைய வேண்டுகோளின்படி நான் உம்மை அவளுடைய வசத்தில் ஒப்புவிக்காவிட்டால், இன்னம் கொஞ்ச காலத்தில் உம்முடைய உயிருக்கே மோசம் வந்துவிடுவது நிச்சயம் என்றும், அப்படிப்பட்ட கெடுதல் ஏதாவது நேருமானால் அவள் எங்களைத் தான் சகலத்திற்கும் உத்தரவாதி ஆக்குவாள் என்றும் எழுதியிருக்கிறாள். அந்த விண்ணப்பத்தைப் பார்த்த பிறகு எங்களுக்கும் பெருத்த கவலை உண்டாகிறது. ஆகையால், அவளுடைய பிரியப்படி உம்மை நாங்கள் அவளுடைய வசத்தில் ஒப்புவித்துவிட எண்ணுகிறோம். அப்படி நாங்கள் உம்மை அனுப்புமுன் நீர் எங்களுக்கு ஓர் ஒப்பந்தம் எழுதிக் கொடுக்க வேண்டும். எங்களுடைய உத்தரவு இல்லாமல் நீர் இந்த ஊரைவிட்டு எங்கேயும் போவதில்லை என்றும் யாருக்கும் கடிதம் எழுதுவதில்லை என்றும் ஒப்பந்தம் எழுதி அதில் நீர் கையெழுத்துச் செய்து கொடுக்க வேண்டும். தினம் காலையிலும், மாலையிலும் போலீஸார் வந்து, உம்மை ஆஜர் பார்த்துக் கொண்டு போவார்கள். நீர் யாருக்கும் கடிதம் எழுதாதபடி தான் பார்த்துக் கொள்வதாக அந்தப் பெண் ஒப்புக் கொண்டிருக்கிறாள். இந்த ஆதாரங்களின்மேல் உம்மை அந்தப் பெண்ணின் வசத்தில் ஒப்புவித்து விடலாம் என்று நாங்கள் தீர்மானித்துவிட்டோம். அந்த ஏற்பாட்டிற்கு நீர் என்ன சொல்கிறீர்? உமது விஷயத்தில் சகலமான பாக்கியதைகளுக்கும் அந்தப் பெண்ணே உரியவள் என்றும் நியாய ஸ்தலத்தார் தீர்மானித்திருப்பதால், அவளுடைய வேண்டுகோளை மறுக்க எங்களுக்கு அதிகாரமே இல்லை. ஆகையால் உம்மை நாங்கள் எப்படியும் அவளிடம் அனுப்பியே தீரவேண்டும். ஆனால்,