பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 87 தீராமல் அவனது மனத்திலிருந்து வந்தது. இருந்தாலும், ஆரம்பத்திலிருந்து தன்னை அக்கிரமமாக அடைத்து வைத்ததன்றி,சிறைச்சாலைக்குள் நடக்கத்தகாத பல சம்பவங்கள் நடக்கும் படி விட்டிருக்கும் அந்தப் போலீஸ் கமிஷனர் அவைகளில் கொஞ்சமும் சம்பந்தப்படாமல் இருக்க மாட்டார் என்ற நினைவும் தோன்றிக்கொண்டே இருந்தது. அதுவுமன்றி, நடு இரவில் அவர்கள் ஷண்முகவடிவை அழைத்து வந்ததும் அவரைப் பற்றிய சம்சயத்தை உறுதிப்படுத்தியது. அவைகள் யாவற்றிலும், தான் நோயாகப் படுத்திருந்த கால்த்தில்’ அபிராமி நியாயாதிபதிக்கு மனுக் கொடுத்ததாகவும், தான் அவளைச் சம்சாரமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நியாயாதிபதி தீர்ப்புச் சொல்லியிருப்பதர்கவும் கமிஷனர் சொன்னது அவனால் நம் பக்கூடாத பெரும் விந்தையாக இருந்தது. அவள் மனுக்கொடுத்த காலத்தில்தான் நோயாளியாக இருந்தாலும், தான் செளக்கியம் அடையும் வரையில் அந்த நியாயாதிபதி பொறுத்திருந்து, தன்னையும் நேரில் வரவழைத்து விசாரித்து இரண்டு கட்சிகளின் வாதங்களையும் கேட்டறிந்தே அந்த வழக்கை முடிவு செய்வது நியாயமாக இருக்க, அதை விட்டு அவர் ஒரு தலைச்சார்பாக தீர்மானம் செய்திருப்பது எவ்விடத்திலும் நடக்காத அதிசயமாக இருந்தது. ஆனாலும், மகா அக்கிரமக்காரர்களான அந்தப் போலீசாருக்குத் தகுந்த படியே நியாயாதிபதியும் அமைந்திருக்கிறார் என்ற எண்ணமும் தோன்றியது. முக்கியமாக தன் விருப்பப்படி நடந்து கொள்ளச் சிறிதும் இடமில்லாமல், சகல விஷயங்களிலும் அவர்கள் தன்னை நிர்ப்பந்தித்து, அவர்கள் சொல்லுகிறபடி தான் நடப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலைமைக்கு அவர்கள் தன்னைக் கொண்டு வந்திருந்ததும் அவனால் சகிக்க இயலாத பெருங் கொடுமையாக இருந்தது. ஆகையால், அந்தத் தரும சங்கடத்தில் தான் என்ன செய்வது என்பதை உணராமல் கலங்கிப் பதறிச் சிறிது நேரம் யோசித்தபின் கலியாணசுந்தரம்