பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பூர்ணசந்திரோதயம் - 4 இன்ஸ் பெக்டரை நோக்கி, ‘ஐயா இந்தத் தேசத்துப் போலீசாரும் நியாயாதிபதியும் நடந்து கொள்வதுபோல, இந்த உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் நடந்துகொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். எவ்விடத்திலும் மனிதர் இதுவரையில் காதால் கேட்காத அக்கிரமங்களெல்லாம் இவ்விடத்தில் நடக்கின்றனவே! நான் என்னுடைய பெயரை மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறேன் என்ற அற்ப முகாந்திரத்தை வைத்துக்கொண்டு என்னை நீங்கள் இவ்விடத்தில் இந்த ஒன்றரை மாசகாலமாகச் சிறைப்படுத்தி இல்லாத அட்டூழியங் களையும் கேவலம் இழிவான காரியங்களையும் செய்து வருகிறீர்கள்! நீங்கள் என்னைச் சிறைப்படுத்திய காரணம் எனக்கு ஆரம்பத்தில் அவ்வளவாக விளங்காவிட்டாலும், இப்போது நடக்கும் காரியங்களிலிருந்து நன்றாக விளங்கிவிட்டது. நீங்கள் யாருடைய துண்டுதலின் மேல் இப்படிப்பட்ட தகாத காரியங்களை எல்லாம் செய்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. பூனாவிலுள்ள தஞ்சை இளவரசருடைய பட்டமகிஷியின் விஷயத்தில் சதி ஆலோசனை செய்துவரும் தாதிப் பெண்களுடைய எண்ணம் நிறைவேறு வதற்கு நான் பெருத்த இடையூறாக இருக்கிறேன் என்பதைக் கண்டு யாரோ சில முக்கியமான மனிதர் உங்களுடைய பதவியை நாடியதால், காரியங்கள் இப்படி நடக்கின்றன என்பது எனக்கு நன்றாக விளங்கி விட்டது. அந்தத் தாதிப் பெண்களில் மூத்தவர்களான அம்மாளு, தனம் என்ற இரண்டு பெண்களும் இதற்குமுன் என்னிடத்தில் பலவிதமான தந்திரங்கள் செய்து என் மனசை மாற்ற முயன்று, கடைசியில் தோல்வியடைந்து போனார்கள். அதுவுமன்றி, நான் அவர்களுடைய சதியாலோசனைக்கு இடையூறாக இருக்கிறேன் என்பதையும் உணர்ந்து எப்படியோ உங்களுடைய தயவைச் சம்பாதித்துக் கொண்டு என்னைச் சிறைப்படுத்தச் செய்து மூன்றாவது தங்கையான அபிராமியை அனுப்பி என்மனசைக்கலைக்கமுயற்சித்திருக்கிறார்கள். அவள்