பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பூர்ணசந்திரோதயம்-4

அவனது வார்த்தைகளைக் கேட்ட போலீஸ் கமிஷனர் தமது மனத்தில் எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, “ஐயா! என்னிடத்தில் வேறே யாராவது இப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகித்திருந்தால், இந்நேரம் நான் அவர்களுக்குத் தக்கபடி புத்தி கற்பித்திருப்பேன். நீர் இத்தனை நாட்கள் நோயாகப் படுத்திருந்து இன்னமும் பலஹீனமான நிலைமையிலேயே இருக்கிறீர் ஆகையால், உம்மிடம் நான் அதிகமாகக் கடுமைக் காட்ட விரும்பவில்லை. ஆகையால், நீர் இப்போது சொன்ன மட்டுக்கு மிஞ்சிய வார்த்தைகளை நான் பொருட்படுத்தாமல் உம்மை இந்தத் தடவை மன்னித்துவிடுகிறேன். இனி நீர் இப்படிப்பட்ட துடுக்கான வார்த்தைகளை என்னிடம் உபயோகிக்க மாட்டீர் என்று நினைக்கிறேன். நீர் குறும் புத் தனத்தினால் இப்படிப் பேசுகிறீரா, அல்லது மதியினத்தினால் இப்படிப் பேசுகிறீரா என்பது தெரியவில்லை. அபிராமி என்ற பெண் அடைபட்டிருந்த அறையில் சுவரைக் குடைந்து கொண்டு நீர் அவள் இருந்த இடத்துக்குப் போயிருந்ததை நானும் மற்றவர்களும் கண்ணாரப் பார்த்ததை நீர் மறந்து விட்டீரா? அவளை நீர் பலாத்காரம் செய்து கீழே தள்ளி அவள் பிரக்ஞை இழந்து போகும் படி செய்து, பிறகு அவளைத் தெளிவிக்க நீர் முயன்றதை நாங்கள் பார்க்கவில்லையா? ‘உன்னுடைய பிடிவாத மெல்லாம் என்னிடம் செல்லுமென்றா நினைத்தாய்? நானோ ஏமாறுகிறவன்? என்ற வார்த்தைகள் உம்முடைய வாயிலிருந்து வரவில்லையா? அந்த வார்த்தை களுக்கு வேறு என்ன அர்த்தம் இருக்கிறது? அவள் கடைசி வரையில் உம்முடைய விருப்பத்துக்கு இணங்க மறுத்துப் பிடிவாதமாக இருக்க, நீர் பலாத்காரமாக அவளை அடக்கி, உம்முடைய துர் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டீர் என்ற அர்த்தம் ஏற்படுகிறதல்லவா? நீர் செய்த காரியத்தை உம்முடைய வாயாலேயே ஒப்புக் கொண்டிருந்தும், இப்போது எல்லாவற்றையும் மறுத்து நாங்கள் ஏதோசூழ்ச்சிகள் செய்தோம் என்று சொல்ல வருகிறீரே உமக்கு ஏதேனும் பைத்தியம்