பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 93 கொஞ்சம் உண்டா? ஏதோ பூனா தேசம் என்கிறீர், பட்டமகிஷி என்கிறீர், சதியாலோசனை என்கிறீர், தாதிப் பெண்கள் என்கிறீர்; உம்மை வசப்படுத்த முயன்றார்கள் என்கிறீர். அந்த விவரமெல்லாம் இன்னதென்பதே எனக்கு விளங்கவில்லை.

இந்த அபிராமி என்ற பெண் ஏதோ திருட்டுச் சொத்தைச் சொற்ப விலைக்கு வாங்கின குற்றத்துக்காக என்னுடைய கீழ்

அதிகாரிகளால் சிறைப்படுத்தப்பட்டவள் என்பது மாத்திரம்

எனக்குத் தெரியுமே அன்றி வேறே எந்த விவரமும் எனக்குத் தெரியாது. அதுவுமின்றி, நிரம் பவும் இளமைப் பருவமும்

நாணமும் வாய்ந்தவளான அந்தப் பெண் உம்மைப் பலாத்காரம்

செய்தாள் என்று சொன்னால், அதைப் பைத்தியக்காரன் கூட ஏற்றுக் கொள்ள மாட்டான். எவ்விடத்திலும் எப்போதும்

சாதாரணமாகப் புருஷர்கள்தான் பலாத்காரம் செய்வது

இயற்கையே அன்றி, பெண்கள் செய்ததாக நான் இதுவரையில்

கேள்வியுற்றதே இல்லை. உம்முடைய உடம்பில் அடிபட்ட

குறிப்பாவது காயமாவது காணப்படவே இல்லை. அவளுடைய உடம் பில் பலவிடங்களில் வீக்கமும், காயமும்

நிறைந்திருந்தனவே. அவற்றிலிருந்து யார் பலாத்காரம் செய்தது என்பது நிச்சயமாகத் தெரியவில்லையா. முக்கியமாக நீர் அவளுடைய அறைக்குள் காணப்பட்டதான அந்த ஒரு சாட்சியமே நீர்தான் குற்றவாளி என்பதை மெய்ப்பிக்கப்

போதுமானது. வேறு எந்த ருஜூவும் எங்களுக்குத்

தேவையில்லை. உண்மையை மறைத்து நீர் சொல்லும் தப்பான வாக்குமூலத்தையும் நாங்கள் நம்பமாட்டோம். உம்மைக்

கலியாணம் செய்துகொள்ள உத்தேசித்திருக்கும் பெண்ணான ஷண்முகவடிவு என்பவளுக்கு உம்முடைய அயோக்கியத்தன மெல்லாம் தெரிந்து போய்விட்டது என்று நினைத்து பயந்து நீர் இப்போது எல்லாவற்றையும் மாற்றி மகா பரிசுத்தமான மனிதர் போலப் பேசுகிறீரா? இந்தப் பாசாங்கைக் கண்டு நாங்களும்,

ஷண்முகவடிவும் ஏமாறிப் போவோம் என்று எண்ணிக் கொண்டீரா? நீர் தான் புத்திசாலியென்றும், மற்றவர்களுக்குப்