பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பூர்ணசந்திரோதயம் - 5 செய்துவிடவேண்டுமென்ற கருத்தோடு இந்த ஏற்பாடு செய்யப் பட்டிருப்பது என்பதும், இந்த மனிதரும், அந்தப் பெண்களைச் சேர்ந்தவரென்பதும் எளிதில் விளங்குகின்றன. ஆகையால், நான் அந்தக் கடிதத்தை வாங்கிப் பார்ப்பதற்காகத் தஞ்சாவூருக்கு வருவது அநாவசியமென்று நினைக்கிறேன். நான்தஞ்சாவூருக்கு வந்து மறுபடி இவ்வளவுதூரம் திரும்பி வந்து மேலும் பூனாவுக்குப் போவதென்றால், அதிகமான பிரயாசையும் காலதாமசமும் ஏற்படும். ஏற்கெனவேயே அதிக காலதாமசம் ஏற்பட்டுவிட்டது. இனியும் நான் சும்மா இருப்பது சரியல்ல. ஆகையால், நீர் தயை செய்து என்னை இவ்விடத்திலேயே இறக்கிவிட்டு விடும். எனக்கு அந்தக் கடிதம் வேண்டாம். நான் இங்கிருந்தபடி நேராகப் பூனாவுக்குப் போகிறேன்.

பஞ்சண்ணா:- (ஏளனமாகப் புன்னகை செய்து) ஐயா! நீர் பேசுவது நிரம்பவும் ஒழுங்காக இருக்கிறது. உம்முடைய விஷயத்தில் இவ்வளவு சிரத்தையும் பிரயாசையும் எடுத்துக் கொண்டு, உம்மைச் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கும் பெரிய உபகாரியான அந்த மனிதர் உமக்கு என்னவிதமான செய்தி எழுப்பி அனுப்பி இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், நீர் உம்முடைய காரியம் தீர்ந்து விட்டதென்று நீர் இப்படியே போவதாகச் சொல்வது முதலில் மரியாதை யாகுமா? அல்லது, நன்றி அறிதலுள்ள மனிதர் செய்யத்தக்க காரியமா? இதுவரையில் நீர் சிறைச்சாலையில் இருந்ததனால், ஏற்கெனவேயே காலதாமசம் ஏற்பட்டுப் போனதாக நீரே சொல்லுகிறீர். இப்போது நாங்கள் உம்மை விடுவிக்கா விட்டால், நீர் இன்னம் எவ்வளவு காலம் பைத்தியக் காரிகளுடைய வைத்தியசாலையில் இருந்து கஷ்டப்பட நேருமோ? இப்போது தஞ்சாவூருக்குப் போய் நீர் திரும்பி வருவதாக வைத்துக்கொண்டாலும், அதற்குச் சுமார் ஐந்தாறு நாட்கள்தான் ஆகும். அதுவரையில் நீர் சிறைச்சாலை யிலேயே இருந்ததாக எண்ணிக் கொள்ளுமேன்.