பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பூர்ணசந்திரோதயம் - 5 குதிரைகளை மேயவிட்டுத் தண்ணீர் குடிக்கச் செய்ததோடு தங்களுக்கும் ஆங்காங்கு சமையல் செய்து, கலியாணசுந்தரம் முதலிய எல்லோருக்கும் சாப்பாடு போட்டு அதிக காலதாமதம் செய்யாமல் புறப்பட்டு மேன்மேலும் பிரயாணம் போக ஏற்பாடு செய்தான். இடையில் காணப்பட்ட ஊர்களில் வண்டியை நிறுத்தினால், ஒருகால் கலியாணசுந்தரம் அங்குக் காணப்படும் மனிதரிடம் தன் வரலாற்றை வெளியிட்டுத் தன்னை விடுவிக்க அவர்களது உதவியை நாடுவானோ என்ற முன் யோசனை யினால், பஞ்சண்ணா வண்டியை ஊர் இருக்கும் இடங்களில் நிறுத்தாமல், நிர்மானுஷ்யமான இடங்களில் நிறுத்தி தங்களது காரியங்களை முடித்துக்கொள்ளச் செய்து சில தினங்களில் தஞ்சையை அடைந்தான்.

தஞ்சை சமீபத்தில் வந்துவிட்டது என்பதை உணர்ந்தவுடன் கலியான சுந்தரத்தின் மனம் தவித்தது. அவர்கள் கடிதத்தைக் கொடுத்துத்தன்னை அனுப்பி விடுவார்களோ, அல்லது தன்னை வஞ்சித்து எங்கேயாவது கொண்டுபோய் அடைத்து விடுவார் களோ என்ற அச்சம் பெருகி வதைத்துக் கொண்டிருந்தது. கடைசியில் வண்டி தஞ்சைப் பட்டணத்தின் ஆரம்பத்தை அடைந்தபோது, சடேரென்று நிறுத்தப்பட்டது. பஞ்சண்ணா ராவ், ‘ஐயா ஊர் வந்துவிட்டது; கீழே இறங்கும்’ என்றான். உடனே கலியாணசுந்தரம் அளவற்ற மகிழ்ச்சியும் குதுகலமும் அடைந்தவனாய்க் கீழே இறங்கினான். அடுத்த நிமிஷத்தில் ஒரு கடிதம் வண்டிக்குள்ளிருந்து கீழே எறியப் பட்டது. பஞ்சண்ணாராவ், “கடிதம் இதோ இருக்கிறது. எடுத்துக் கொள்ளு” என்றான்.

அடுத்த கூடிணத்தில் அந்த வண்டி விசையாக அப்பால் சென்றுவிட்டது. கலியாணசுந்தரம் ஆவலோடு கீழே குனிந்து கடிதத்தை எடுத்து அதன்மேல் விலாசத்தை பார்த்துவிட்டுத் திரும்பி வண்டியைப் பார்ப்பதற்குள் அது பக்கத்திலிருந்த ஒரு