பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் iO 3 கொண்டு ஒழுகி வருகிறவர்கள். ஒரு கிணறு நிறைய நிரப்பப் பட்டிருக்கும் பாலில் ஒரு துளி விஷத்தைக் கலந்தாலும், அந்தப் பால் முழுதும் விஷமாக மாறி விடுவதுபோல, தாங்கள் செய்ய நினைக்கும் இந்தக்கொடிய பாவமானது தாங்கள் இதுவரையில் செய்துள்ள நற்காரியங்களையும் புண்ணிய கருமங்களையும் ஈசுவர பக்தியையும் நிஷ்பிரயோசனமாக்கிவிடுமே? ஆகையால் தாங்கள் இந்த அற்ப ஆசையை அடக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் இதுவரையில் அரும்பாடுபட்டுத் தேடியுள்ள புண்ணியத்தை எல்லாம் இழந்து கொடிய நரகத்துக்கு ஆளாகும்படியான இந்த துர்நினைவை விட்டுவிடுங்கள். சிற்றின்பமானது மனப்பிராந்தி யினால் உண்டாகும் பொய்த் தோற்றமே அன்றி, உண்மையில் இன்பமேயல்ல என்பதையும், அது நிரம்பவும் அற்பமானது என்பதையும், நிலைத்ததல்ல என்பதையும் தாங்கள் புஸ்தகங்களில் படித்தறியவில்லையா? தாங்கள் இந்த உலகைத் துறந்து காஷாயம் வாங்கிக்கொண்டிருப்பதிலிருந்து, மேற்படி தத்துவங்களை எல்லாம் தாங்கள் நன்றாக உணர்ந்தவர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆகையால், தங்களுக்கு நான் இந்த விஷயத்தில் அதிகமாக எடுத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தயை செய்து தங்களுடைய மனசை அடக்கிக் கொண்டு இப்படிப்பட்ட பாவ நினைவைக் கொண்டதைப் பற்றிக் கழிவிரக்கம் கொண்டு ஈசுவரனுடைய மன்னிப்பை நாடுங்கள்’ என்று நிரம்பவும் பணிவாகக் கூறினாள். அவள் கூறிய நற்புத்தி பண்டாரத்தின் மனதில் சிறிதும் பதிந்ததாகத் தோன்றவில்லை. அவர் அவளது விஷயத்தில் இரக்கமென்பதே கொள்ளவில்லை. ஆனால், முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த மோகாவேசங் கொண்டவராய் அவளை நோக்கி உருக்கமாகப் பேசத் தொடங்கி, ‘பெண்ணே! ஷண்முகவடிவு! நீ சொல்லும் வேதாந்த தத்துவங்களை எல்லாம் நானும் புஸ்தகங்களில் படித்திருக்கிறேன். ஒருவன் விஷயங்களைத் தெரிந்து கொண்டு விட்டால் அதன்படியே நடக்கிறான் என்று சொல்ல முடியுமா? மனிதனால் இயலாத விஷயங்களை எல்லாம் புஸ்தகங்களில்