பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i Q4 பூர்ணசந்திரோதயம் - 5

எழுதி வைத்திருக்கிறார்கள். அதன்படி நடப்பது சாத்திய மாகுமா? உலகத்தைத் துறந்து காஷாயம் வாங்கிக் கொள்ளு கிறவர்கள், சிற்றின்பம் எதையும் மனசாலும் நினைக்கக் கூடாதென்று முன்னோர் விதித்திருப்பது நிஜந்தான். அதன்படி நடப்பதல்லவா பிரயாசை. மனிதனுடைய மனசும் பஞ்சேந்திரியங்களும் மனிதனுக்கு அடங்காத பைத்தியங் கொண்ட கொடும்புலிகள் போன்றவை. ஆகையால், அவன் . அவைகளை முற்றிலும் அடக்கி சிறிதும் குற்றமற்ற பரிசுத்த மூர்த்தியாக நடந்துகொள்வது அசாத்தியமான காரியம். முன் காலத்தில் தமது தபோபலத்தினால் மகா அரிய காரியங்களைச் செய்த விசுவாமித்திரர் முதலியோர் எல்லாம் ஸ்திரீகளுடைய அழகினால் மதிமயங்கிப் போய், தமது ஆயுளில் சொற்பகாலம் சிற்றின்பத்தில் லயித்திருக்க வில்லையா? அப்படிச் செய்த தனால் அவர்களுடைய மகிமை குறைந்து போய்விட்டதா? மகாஅற்புதமான அழகு வாய்ந்த யெளவனப் பெண்மணியான உன்னை அந்த விசுவாமித் திரர் முதலிய தபோதனர்கள் காண்பார்களானால், அவர்கள் முன் செய்ததுபோல, மறுபடியும் மதிமயங்கி உன்னுடைய சிநேகத்தை நாடுவார்கள் என்பது முக்காலும் திண்ணம். அப்படியிருக்க, என்னைப் போன்ற அற்ப மானிடர்கள் உன்னைக் கண்டு மயங்குவது ஒரு பெரிய காரியமா? நான் இதுவரையில் நிரம்பவும் பரிசுத்தமான நடத்தை உள்ளவனாகவே நடந்துவந்தேன். நான் சகலமான சிற்றின்ப சுகத்தையும் விலக்கி என் மனசை அடக்கியே ஒழுகி வந்தேன். உன்னைக் கண்ட பிறகே, என் மனசின் உறுதி தளர்ந்து, இப்படிப்பட்ட விகாரம் ஏற்பட்டது. அது என் மனசின் குற்றமல்ல. மகா அற்புதமான சக்திவாய்ந்த உன்னுடைய வடிவழகே அதற்கு உத்தரவாதி. எப்போது என் மனம் பேரின்ப நாட்டத்தை விட்டு உன் அழகைக் கண்டு சலித்ததோ, அப்படிப்பட்ட களங்க மனதோடு நான்துறவறத்தை நடத்துவது மகா பாவமான செய்கை. எந்த ஆசையினால் என் மனம் சலித்ததோ, அந்த ஆசையைப் பூர்த்தி செய்துகொண்டு, சே!