பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 107 ஒழுங்கல்ல. நான் ஒரு குடும்ப ஸ்திரீ. இப்படிப்பட்ட துர் நடத்தையை மனசால் நினைக்கும் போதே, என் உடம்பு குன்றிப் போகிறது. என் உயிர் போனால்கூட, நான் என் கற்பை மாத்திரம் இழக்கமாட்டேன். ஆகையால், தாங்கள்.தயை செய்து என்னை விட்டு அப்பால் போங்கள். நான் தங்களுடைய கண்ணில் படாமல் இப்போதே இந்த மடத்தை விட்டுப் புறப்பட்டு வேறு எங்கேயாவது போய்விடுகிறேன். தங்கள் மனசின் சலனமும் உடனே விலகிப்போம்” என்றாள்.

அதைக் கேட்ட பண்டாரம் முன்னிலும் அதிக உறுதியாகவும் தீர்மானமாகவும் பேசத்தொடங்கி, ‘பெண்ணே நீ சொல்லுகிற படி செய்வதற்கு நான் தயாராக இல்லை. நான் சொல்கிறபடி நீ செய்வதைத் தவிர வேறே எந்த யோசனையும் இப்போது என் காதில் ஏறாது. என் மனசில் உண்டாகி என் உயிரைக் குடிக்கும் இந்தக் காமவேட்கை உன்னால் ஏற்பட்டது. ஆகையால், உன்னைக் கொண்டு தான் இதை நான் தணித்துக் கொள்ள வேண்டுமே அன்றி, இதற்காக நான் வேறே ஒருத்தியைத் தேடிப் போவது சாத்தியமான காரியமல்ல. யாராவது கையிலுள்ள கனியைவிட்டு மரக்கொம்பிலுள்ள பிஞ்சு பழுக்குமென்று எதிர்பார்த்திருப்பார்களா? முன்னொரு தரம் நீ என் கண்ணில் பட்டு என் மனசை மயக்கிப் புண்படுத் தி பலவிதமான விகாரங்களைக் கிளப்பிவிட்டு, முடிவில் என்னை ஏமாற்றிப் போய்விட்டாய். உன்னால் நான் என் பழைய ஸ்தானத்தை இழந்து நிரம் பவும் அவமானமடைந்து இங்கே வந்து சேர்ந்தேன். உன்னை நான் மறக்க முயன்றும், அது சாத்தியமில்லாதபடி நான் தத்தளித்திருக்கும் நிலைமையில் நீ மறுபடி இங்கே ஏன் வந்தாய்? அது உன்னுடைய குற்றமே ஒழிய என்னுடையதல்ல. ஏற்கெனவே புண்பட்டு உழலும் என்மனசை நீ மறுபடியும் மீளாதபடிதுன்பசாகரத்தில் ஆழ்த்திவிட்டுப் போக வந்தாயா? அப்படி நீ செய்ய உனக்கு எங்கிருந்து உரிமை உண்டாயிற்று? உன்னால் என் மனம் புண்படும் போது,

rooms