பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கள் Q9 நம்மனதால் நினைத்துத் துதிக்கிறோமல்லவா. நம்முடைய மனசு இன்ன இடத்திலிருக்கிறதென்பது நமக்கே தெரிய வில்லை. அது இன்ன இடத்திலிருக்கிறது என்பதையும் அது என்ன எண்ணுகிறது என்பதையும் கடவுள் அறிந்து சதாகாலமும் கவனித்துக் கொண்டிராவிட்டால், நாம் அவரை நினைத்துத் துதிக்கிறோம் என்பது அவருக்குத் தெரியாது அல்லவா? தாங்கள் இந்த மடத்திலிருந்து சுவாமிக்குப் பூஜை நடத்து கிறீர்களே. அதை மாத்திரம் அவர் கவனித்து தங்களுடைய கெட்ட காரியங்களையும் நினைவுகளையும் மாத்திரம் கவனிக்காமல் இருப்பாரென்று நினைக்கலாமா? நாம் செய்யும் நல்ல காரியத்தைக்கடவுள்கவனித்து அதற்காக நமக்கு நல்ல கதி அளிப்பாரென்றும் நாம் எண்ணுவதுபோல அவர் நம்முடைய கெட்டகாரியத்தையும் கவனிப்பாரல்லவா? நமது மனதில் நாம் கடவுளை நினைப்பதை அவர் எப்படி உடனுக்குடன் அறிந்து கொள்கிறாரோ அதுபோல் நாம் நினைக்கும் தீய நினைவு களையும் அவர் அறிந்துகொண்டுதான் இருக்கிறார். கடவுளாகிய சகல வல்லமையுள்ள ஒரு சாட்சி நம்முடைய துக்கத்திலும் விழிப்பிலும் நம்மோடு கூடவே இருக்கிறார் என்ற எண்ணம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டாமா? எவ்வளவோ படித்தவர்களாகிய தாங்கள் பூஜை செய்யும் போது கடவுள் இங்கே இருப்பதாகவும் இவ்விதமான தீமைகள் செய்யும்போது அவருக்குக் கண் இல்லாமல் போகிறதென்றும் நினைப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி நினைத்து இறுமாப்படைந்து - கெட்ட வழியில் பிரவேசித்தால் அது ஒருநாளும் பலித மடையாது. ஆகையால், நான் இங்கே தனியாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று, தாங்கள் என்னைப் பலாத்காரம் செய்யலாமென்ற எண்ணத்தை மாத்திரம் விட்டு விடுங்கள்’

என்றாள். - -

பண்டாரம் அவளது சொல்லைச் சிறிதும் செவியில் கொள்ளாமல் ஏளனமாகப் புன்னகை செய்து, “பெண்னே இந்த வேதாந்தத்தை எல்லாம் நான் உன்னிலும் அதிகமாக அறிவேன்.