பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 பூர்ணசந்திரோதயம் - 5 அதெல்லாம் புஸ்தக பாடமே ஒழிய, அதன்படி யார் நடந்து கொள்ளுகிறார்கள்? ஒருவரும் நடக்கிறதில்லை. இந்தக் கலிகாலத்தில் சாமியாவது பூதமாவது; அது மனிதருக்குப் பிரத்தியகூடி மாகிறதாவது; அவர் தூணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார் என்று சொல்வதெல்லாம் பாமர ஜனங்களை வெருட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுக் கதையே அன்றி வேறல்ல. கடவுள் சகலமான வஸ்துக்களையும் படைத்து, அது என்ன செய்கிறதென்று பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் அதைவிடப்பைத்தியக்காரத்தனம் வேறொன்றுமில்லை. இதைவிட கண்ணியமானதும் உபயோக முள்ளதுமான வேறே அலுவல் எதுவும் கடவுளுக்குக் கிடையாதா? எல்லா ஜெந்துக்களையும் படைக்கும் வல்லமை அந்த ஒரு மனிதருக்கே இருக்குமானால், எல்லாஜெந்துக்களும் நல்ல வழியிலேயே நடக்க வேண்டுமென்று சிருஷ்டிக்க மாத்திரம் அவருக்கு வல்லமை இல்லாமல் போய்விட்டதா? அப்படி நினைப்பது தவறு. எல்லா ஜெந்துக்களையும் படைக்கும் வல்லமை அவருக்கிருந்து, அவைகள் நல்ல வழியிலேயே நடப்பதே அவருக்குப் பிடித்தமாக இருந்தால், எல்லா ஜந்துக்களும் அப்படி நடக்கக்கூடியதாய் சிருஷ்டிக்கப் பட்டிருக்கும். அப்படி இல்லாமல், ஒவ்வொரு ஜந்துவும் அதனதன் பிரியப்படி தனது ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள எண்ணுகிறது. ஆகையால், அப்படி ஒவ்வொன்றும் தன் தன் விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்பதே கடவுளின் நோக்கமென்பது நன்றாகத் தெரிகிறது. அதற்கிணங்க, அவர் இந்த உலகத்தில் எத்தனையோ இன்பங்களையும் சுகங்களையும் படைத்து வைத்திருக்கிறார். ஒரு ஸ்திரீயைப் பார்த்து ஒரு புருஷன்தான் ஆசைப்படலாம் என்பது மனிதருடைய கட்டுப்பாடே ஒழிய, கடவுளின் நிர்ணயமல்ல. அது கடவுளின் நிர்ணயமாக இருந்தால் ஒரு மனிதனுக்கு ஒரே ஒரு ஸ்திரீயினிடத்தில்தான் பிரியம் உண்டாகுமன்றி, மற்றவளைக் கண்டால் பிரியம் உண்டாகாது. எப்போது ஒரு