பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 111 மனிதனுக்குப் பல ஸ்திரீகளிடத்தில் ஆசை.உதிக்கும்படி கடவுள் சிருஷ்டித் திருக்கிறாரோ, அது கடவுளுக்குச் சம்மதமான காரியமென்றே எண்ண வேண்டும். உலகத்தில் மனிதரால் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடு என்பதொன்று; கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட அமைப்பு வேறு. நான் கடவுளுடைய சட்டங்களுக்குக் கட்டப்படுவேனே அன்றி மனிதனால்

ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுக்கு உட்படக் கூடியவனல்ல.

நான் உன்னைக் கண்டவுடன் என் மனசில் உன்மேல் காதல் உண்டாகும்படி கடவுள் சிருஷ்டித்திருப்பதால், அந்த ஆசையை நான் பூர்த்தி செய்து கொள்ளாமல் தடுப்பது கடவுளின் சிருஷ்டிக்கு மாறாக நடந்த குற்றமாகிறது. மனிதனால்

ஏற்படுத்தப்பட்ட நிர்ணயப்படி பார்த்தால் நான் உன்னை அடையக் கூடாது என்று நீ சொல்லுகிறாய். அது அக்கிரமமான ஒரு விதியாகையால் அதன்படி நடக்க நான் பிரியப்பட வில்லை. நீ சொல்லுகிறதுபோல கடவுள் எல்லா இடத்திலும் இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும் அவர் மனிதனால்

ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தத் தவறுகளை எல்லாம் ஒருநாளும் கவனிக்கவே மாட்டார். ஏனென்றால், இந்த ஏற்பாடுகள் அவருடைய சிருஷ்டி நோக்கத்துக்கு மாறாகச் செய்யப்பட்ட ஏற்பாடுகள். ஆகையால், இந்தக் குற்றமெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டல்ல, முக்கியமாக அவருடைய கருத்து பெண்ணும்

ஆணும் காதல்கொண்டு தங்களுடைய இனம் அழிந்துபோகாத படி செய்து எப்போதும் உலகியல் நடைபெறும்படி செய்ய வேண்டியது. அதுவொன்றே அவருடைய நோக்கம்.

அதற்காகவே அவர் ஸ்திரீ புருஷர்களையும், ஒருவர் மேல் ஒருவருக்கு வேட்கையும் படைத்திருக்கிறார். மற்றப்படி இன்னின்னார் இன்னின்னாரை அடையவேண்டுமென்ற உள் வயணங்களை எல்லாம் அவர் ஏன் கவனிக்கிறார்? ஆகையால்,

நீ எண்ணி அஞ்சிறபடி இது ஒரு பெரிய பாவமாகாது. இதற்காக உன்னையாவது என்னையாவது கடவுள் நரகத்திற்குக்

கொண்டுபோகப் போகிறதில்லை. நீ நிச்சயமாக நம்பலாம். பிற

பூ.ச.V-8