பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பூர்ணசந்திரோதயம் - 5 மனிதர் இதை அறிந்தால் வயிற்றெரிச்சலினால் தூவிக்கத் தொடங்குவார்கள். அதற்கு மாத்திரம் இடம் கொடுக்காமல் ரகசியமாக நாம் நமது பிரியப்படி நமது காதலைப் பூர்த்தி செய்து கொள்வதைப்பற்றி யாதொரு ஆட்சேபமும் இல்லை. ஆகையால், கடவுள் நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பார் என்று லஜ் ஜைப் படவே தேவையில்ல. ஒரு தகப்பன் தன்னுடைய பெண்ணை வேறொரு புருஷனுக்குக் கலியாணம் செய்துகொடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து களிக்கும்படி சோபனச் சடங்குகளை நடத்தி யாவற்றையும் சந்தோஷமாக கவனித்துக்கொண்டிருப்பதில்லையா?

அதுபோலவே, சர்வ பிதாவாகிய கடவுளும் அவருடைய குழந்தைகளாகிய நாம் அவரால் படைக்கப்பட்ட இன்பங்களை அனுபவித்து சுகப்படுவதைக் கண்டு சந்தோஷப் படுவாரே அன்றி இதைப் பற்றி கோபமே கொள்ளமாட்டார். ஆனால், இந்த விஷயம் உனக்குப் புதியதாக இருப்பதனால், நீ ஒருவிதமான நாணம் கொள்வது இயற்கைதான். ஆகையால், நீயாகப் பிரியப்பட்டு என்னிடம் வருவாய் என்று நான் எதிர்பார்க்க முடியாது. நான் இந்த விஷயத்தில் உன்னை வற்புறுத்திக் கொஞ்சம் பலாத்காரமாக நடந்துகொள்வது அவசியம்தான். ஆகையால் அப்படியே செய்கிறேன்’ என்று கூறி அவளண்டையில் நெருங்கி வந்தார். உடனே ஷண்முக வடிவு முற்றிலும் பதறிப்போய், ‘ஐயா! நீங்கள் சொல்லும் நியாயமும், செய்யும் காரியமும் கொஞ்சமும் ஒழுங்காக இல்லை. இதற்கும் கடவுளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று நீங்கள் நினைப்பது விந்தையாக இருக்கிறது. அதுவே உண்மையாக வைத்துக்கொண்டாலும், நாம் இந்த உலகத்திலிருக்கும் வரையில் ஜன சமூகத்துக்குக் கட்டுப்பட்டு அவர்களால் ஏற்படுத்தப்பட்ட நிர்ணயங்களின் படி நடந்து கொள்ளவேண்டாமா? நீங்கள் உலகைத்துறந்த சன்னியாசியாக இருப்பதால், ஜனங்களுடைய ஏற்பாடு உங்களைக் கட்டுப்படுத்தாது என்று நினைக்கலாம். நீங்கள் பரிசுத்தமான