பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் i 5 நம்பியதற்கு மாறாக தாம் ஏமாற்றப்பட்டுப் போனதையும் கண்டு அவர் பெரிதும் ஏக்கமடைந்தார். அந்த வடிவழகின் மகா நுட்பமான உடம்பு தீய்க்கு இரையாவதைக் கண்டு சிறிதும் பொறாத பண்டாரம் உடனே துடிதுடித்து, ‘பெண்னே! வேண்டாம். நான் உன்னை இனி ஒன்றும் செய்வதில்லை. உன் சமீபத்திலும் வருகிறதில்லை. நெருப்பு உடம்பில் உறைக்கு முன் நீ அந்தப் புடவையை அவிழ்த்துப் போட்டுவிடு. நான் இதோ வெளியில் போய்விடுகிறேன். நீ வேண்டுமானால் உள் பக்கத்தில் தாழ்ப்பாள் போட்டுக்கொள்’ என்று கூறிக் கொண்டே, கதவைத் தட்டி வெளியிலிருந்த கிழவியைக் கூப்பிட்டு இரண்டொரு வார்த்தையில் விஷயத்தை அவளுக்கு அறிவுறுத்தினார்.

உடனே வெளித் தாழ்ப்பாள் விலக்கப்பட்டது. பண்டாரம் ஒரே ஒட்டமாகப் பாய்ந்து அங்குமிங்கும் ஓடி பக்கத்தில் தண்ணீர் இருக்கிறதாவென்று தேடிப் பார்த்தபடி கிழவியை நோக்கி, ‘அவளுடைய புடவையை அவிழ்த்துவிடச் சொல்; அல்லது அவள் கீழே கிடந்து புரண்டால் நெருப்பு அவிந்து போகும். நீ உள்ளே போய் அவளுக்குத் தைரியம் சொல்லி, நெருப்பை விலக்கிக் கொள்ளச் செய்” என்று கூறியவண்ணம் தலைதெறிக்க இரண்டாம் கட்டிற்கு ஓடினார்.

கிழவி உள்ளே வருவதற்குள் ஷண்முகவடிவின் முன் பக்கத்துப் புடவை முழுதும் பற்றி எரிந்துபோய் ப் பின் பக்கத்திலும் இரவிக்கையிலும், தலைமயிரிலும் பிடித்துக் கொள்ளத் தொடங்கியது. அந்த உத்தமி அந்தக் கொடிய அக்னியைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தத்தளித்து நின்றாள். அவள் தனது உயிரைவிடத் தனது கற்பே பெரிதென நினைத்து அபாரமான வீரத்தனத்தோடு திடமனம் கொண்டு உறுதியாக நின்றாள். ஆனாலும், அவளது புடவையிலிருந்த நெருப்பு உடம்பை ஆங்காங்கு சுட்டு எரிக்கத் தொடங்கவே, அதனால் உண்டான எரிச்சலும் நோவும் சகிக்கவொண்ணாத நரக