பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பூர்ணசந்திரோதயம் - 5 அழைத்துக்கொண்டு வரும்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் வண்டிக்காரர்களுக்கு உத்தரவு செய்ய அவர்கள் வண்டிகளை ஒட்டிக்கொண்டு அவ்விடத்தை விட்டுப் போய்விட்டனர். உடனே இன்ஸ் பெக்டரும் மற்றவர்களும் அந்த பங்களா விற்குள் நுழைந்தனர். உள்ளே இருந்த கட்டிடத்தண்டை அவர்கள் போகவே, போலீஸ் இன்ஸ்பெக்டரால் முன்னரே அனுப்பப்பட்டிருந்த இரண்டு கூலியாட்கள் மண்வெட்டி, கடப்பாரை, லாந்தர் முதலிய கருவிகளோடு அவ்விடத்தில் எதிர்ப்பட்டனர்.

நீலமேகம்பிள்ளையும், லீலாவதியும் முன்னால் நடந்து செல்ல, போலீஸ் இன்ஸ்பெக்டரும், வைத்தியர்களும், கூலியாட்களும் சிறிது பின்னால் தொடர்ந்து சென்றனர். லீலாவதி அந்த பங்களாவில் நீண்டகாலம் வசித்திருந்தவள் ஆதலால், அந்தத் தோட்டத்தின் ஒவ்வொரு பாகமும் அவளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. முதல் நாள் இரவு முதல் அவள் ஒய்வில் லாமல் அல்லல் பட்டிருந்தவள் ஆதலால், அவளது மனதும் உடம்பும் முற்றிலும் தளர்வடைந்து சோர்ந்து போயிருந்தன. ஆனாலும், தான் எடுத்த காரியத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்ற உறுதியான சங்கற்பம் ஒன்றே அவளது மனோமெய்களுக்கு அபாரமான வலுவூட்டிக் கொண்டிருந்தது. ஆகவே, அவள் திடமாகவே நடந்து சென்றாள். இறந்துபோன ஜெமீன்தார் புதைக்கப்பட்ட இடத்தில் புல் முளைத்தும், சருகுகளும் செத்தைகளும் படிந்தும் அடையாளம் தெரியாதபடி மறைந்து போயிருந்தது. ஆனாலும் அவள் தனது கவனத்தை நன்றாகச் செலுத்தி, அன்றைய தினம் தான் கண்ட மரங்கள் செடிகள் முதலியவற்றின் அடையாளங் களைக் கொண்டு அந்த இடத்தைக் கண்டுபிடித்து அவ்விடத்தில் வெட்டும்படி கூலியாள்களிடம் கூறினாள். அவர்கள் உடனே அவ்விடத்தில் தரையை வெட்டி மண்ணைப் பெயர்க்கத் தொடங்கினர். அவ்விடத்தில் காவலாகவும் சாட்சியாகவும்