பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பூர்ணசந்திரோதயம்-5 வேதனையைக் கொடுத்தன. ஆதலால், அவள் தனது பற்களைக் கடித்துக்கொண்டு அந்த மரண வேதனையைச் சகித்துக் கொண்டிருந்தாள். மேலும் அரைக்கால் நாழிகை செல்ல, அவளது பிரக்ஞை முழுதும் அடியோடு தவறிப் போய்விடவே, அவள் வேரற்ற மரம்போலப் படேரென்று தலையில் வீழ்ந்து விட்டாள். அதன் பிறகு அவளது உடம்பில் சுடுவதனால் ஏற்பட்ட எவ்விதப் பாதையையும் அவள் உணரவே இல்லை.

அந்தச் சமயத்தில் பண்டாரம் இரண்டாங் கட்டிலிருந்து தண்ணீர் நிறைய இருந்த ஒரு குடத்தைத் தூக்கிக் கொண்டு ஒடோடியும் வந்து ஷண்முகவடிவின் மீது வார்த்து அவளது ஆடைகளையும் உடம்பையும் நனைத்து நெருப்பை அவித்தார். கிழவி என்ன செய்வதென்பதை அறியாமல் அங்குமிங்கும் ஒடித் தாண்டவமாடுகிறாள்.

பண்டாரம் கொணர்ந்த குடத்தின் தண்ணீரினால், நெருப்பு முழுதும் அடியோடு அணைந்து போய்விட்டதானாலும், ஷண்முக வடிவு அசைவு, பேச்சு முதலிய உயிர்ச் சின்னங் களின்றித் தனது கண்களை மூடியபடி அலங்கோலமாகத் தரையில் கிடந்தாள். அவளது முகத்தில் பிரேதக்களை காணப் பட்டது. பண்டாரம் அவளுக்கருகில் நெருங்கி அவளது கையைப் பிடித்து நாடி அடித்துக் கொள்ளுகிறதா என்று பார்த்தார். நாடி அடித்துக்கொண்டதே தெரியவில்லை. அவள் இறந்து போய்விட்டாள் என்ற எண்ணம் பண்டாரத்தின் மனதில் தோன்றியது. அவர் தமக்கருகிலிருந்த கிழவியை ஏவி ஷண்முக வடிவிற்கு உயிர் இருக்கிறதோவென்று பார்க்கச் செய்ய அவள் அவ்வாறே அந்த மடந்தையின் மார்பு முதலிய இடங்களில் கையை வைத்துப் பார்த்து, ‘உயிர் இருப்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை இவள் மூர்ச்சித்து வீழ்ந்திருந்தாலும் இருக்கலாம். ஆகையால் நாம் ஏதாவது சிகிக்சை செய்து முயற்சி செய்து பார்க்கலாம்” என்றாள்.