பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பூர்ணசந்திரோதயம்-5 செய்கிறது? இவளுடைய உடம்பில் நெருப்புச் சுட்ட தழும்புகளிருக்கும். அதற்கிணங்க, இவள் இங்கே நடந்ததையும் வெளியில் சொல்லுவாள். எல்லோருக்கும் இவளுடைய சொல் உண்மையாகவே படும். அது நமக்கு நிரம்பவும் கெடுதலாய் முடியும். ஆகையால், இவளை நாம் இப்படியே விட்டிருப்பது நல்லதல்ல’’ என்றார்.

கிழவி, “அப்படியானால், இவளுக்கு நாம் இப்போது சிகிச்சை செய்து இவளுடைய உயிரைத் திருப்புவதும் உசிதமல்ல. பிறகு நாம் வேறு எதைத்தான் செய்கிறது? ஏன்? நாம் இன்னொரு காரியம் செய்யக்கூடாதா? இவளைத் தூக்கிக் கொண்டு போய்க் கொல்லையிலிருக்கும் கிணற்றில் போட்டு விடுவோமே என்றாள்.

பண்டாரம், ‘அதுவும் பலவகையில் கெடுதலாக முடியும். முதலில் நாம் குடிக்கிற தண்ணிர்கெட்டுப்போகும். அதுவுமன்றி இவள் கால்தவறிக் கிணற்றில் விழுந்துவிட்டதாக நாம் சொன்னாலும், இவளுடைய உடம்பிலிருக்கும் நெருப்புத் தழும்புகள் சந்தேகத்தை உண்டாக்கும். போலீசாருக்கும் ஜனங்களுக்கும் திருப்திகரமான சமாதானம் சொல்லி நாம் தப்பித்துக்கொள்வது நிரம் பவும் பிரயாசையாக முடியும். ஆகையால், அப்படிச் செய்யக்கூடாது’ என்றார்.

கிழவி, ‘பிறகு நாம் என்னதான் செய்கிறது? இது எந்த வழியிலும் போகமுடியாத பெரிய இக்கட்டாக இருக்கிறதே!” என்று கூறித் தவித்தாள்.

உடனே பண்டாரம் மேலும் கால்நாழிகை வரையில் ஆழ்ந்து யோசனை செய்து, “சரி, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அதன்படி செய்துவிடுவோம். இவளை நாம் உயிரோடாவது இறந்தநிலைமையிலாவது இவ்விடத்தில் வைத்துக் கொள்வதே பிசகு. இவள் நெருப்புச்சுட்டுப் புண்பட்டு உணர்வில்லாமல் விழுந்துகிடக்கும் இந்த நிலைமையில் இவளை மேலும்