பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2O பூர்ணசந்திரோதயம் - 5 பதமான குறி எதுவுமில்லாமல் செய்துவிடுவோம். நாளைய தினம் காலையில் யாராவது நம்மிடம் வந்து இதைப்பற்றிக் கேட்டால்கூட, நமக்கொன்றும் தெரியாதென்று பிரமாணிக்கம் செய்துவிடுவோம். அவள் நம்மேல் குற்றம் சுமத்தினால் அதற்கு வேறே சாட்சி ஒருவருமில்லை. ஆகையால், போலீசார்நம்மேல் எவ்வித நடவடிக்கையும் எடுத்துக் கொள்ள முடியாது: என்றார்.

கிழவி அவர் கூறிய யோசனையை ஆமோதித்தாள். உடனே சாமியார் அவளை இரண்டாங்கட்டிற்கு அனுப்பி கெட்டியான தாம்புக் கயிறொன்று எடுத்து வரும்படி செய்தார். அவள் மீது பாதி எரிந்தும், பாதி எரியாமலும் இருந்த புடவை, இரவிக்கை முதலியவற்றை விலக்கிவிடுவதா, அல்லது அப்படியே வைத்திருப்பதா என்று பண்டாரமும் கிழவியும் சிறிதுநேரம் யோசனை செய்து முடிவில் அவைகளை நீக்கிவிடுவதே நல்லதென்று தீர்மானித்தனர். தன்னை அவள் கொளுத்திக் கொண்டாள் என்பதை அந்த ஆடைகள் உடனே உறுதிப் படுத்தும் ஆதலால், அவைகள் இல்லாவிடில், அவளது வார்த்தையை ஜனங்கள் உடனே நம்பிவிட மாட்டார்கள் என்ற நினைவினால் அவர்கள் அவளது ஆடைகளை விலக்கி கிழவியின் கிழிந்த சேலையொன்றை அவள் மீது சுற்றினார்கள். அதன்பிறகு ஷண்முகவடிவு அவ்விடத்தில் பிரிக்கப்பட்டிருந்த பெரிய பாயில் வைத்துச் சுற்றப்பட்டாள். உடனே பண்டாரம் தாம்புக்கயிற்றைக் கொண்டு அந்தப் பாய் மூட்டையை நன்றாக வரிந்துகட்டி, அதுகெட்டியாக இருக்கிறதா என்று இரண்டு மூன்று தரம் அப்புறம் இப்புறம் புரட்டிப் பார்த்தபின்னர், அதைத்துக்கித் தமது மார்பின் மீதும் இடது தோளின் மீதுமாகச் சார்த்திக்கொண்டு மடத்தைவிட்டு வெளிப்பட்டார். கிழவி உடனே வெளிக்கதவைத் தாளிடாமல் மூடி வைத்து பண்டாரம் திரும்பிவரும் வரையில் தான் காத்திருக்க வேண்டு மென்ற எண்ணத்தோடு நடைத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள்.