பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 121

பாய் மூட்டையை எடுத்துக்கொண்டு புறப்பட்ட பண்டாரம் நாற்புறங்களிலும் திரும்பித் தமது பார்வையைச் செலுத்தி மனிதர் யாரும் வரவில்லை என்பதை நிச்சயித்துக்கொண்டு இழக்கோட்டை வாசலை நோக்கிச் செல்லலானார். சென்றவர் மூட்டையைக் கிழக்கு திக்கில் மாரியம்மன் கோவிலுக்குப் போகும் பாதையோடு சென்றால் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த ஜெவான்கள் யாராகிலும் கண்டுகொள் வார்கள் என்று அஞ்சி, அந்த வழியே செல்லக் கூடாதென்று தீர்மானித்துக்கொண்டு கீழ் அலங்கத்தைக் கடந்து ஊருக்குள் புகுந்து கிழக்கு ராஜவீதியின் வழியாக அரண்மனை வாயிலுக்குள் நுழைந்து அதன் வடக்கு ஆஜாரத்தின் வழியாக வெளிப்பட்டு வடக்கு ராஜவீதியை நோக்கிச் சென்றார். அவரது கருத்து பெரிய ராஜவீதிகளின் வழியாக ரோந்துக்காரர்கள் வந்து கொண்டிருப்பார்கள். ஆதலால், தாம் அவைகளை விலக்கி, சிறிய தெருக்களின் வழியாகவும், சந்துகளின் வழியாகவும் போக உத்தேசித்தே அவ்வாறு சென்றார். முடிவில் அந்த மூட்டையை சிவகங்கைக் குளத்திற்கு அப்பாலுள்ள சேப்பனாவாரி என்னும் பயங்கரமான காட்டிற்குள் போட்டுவிட வேண்டுமென்ற கருத்தோடு அவர் மேற்குத் திக்கில் சென்றார். ஆனால், அவரது எண்ணம் முடிவுபெறாமல் போய்விட்டது. அரண்மனையின் வடக்கு ஆஜாரத்தின் வழியாக வெளிப்பட்டு வடக்கு ராஜவீதியை நோக்கி நடந்து அந்த வீதிக்கருகில் நெருங்கிய காலத்தில் அவ்விடத்தில் ரோந்துக்காரர்களின் குரல் கேட்டது. ஆகவே அவர்அஞ்சி நடுநடுங்கி அந்த ராஜவீதிக்குப் போகாமல், அதற்குப் பக்கத்தில் இருந்த ராணிவாய்க்கால்சந்திற்குள் புகுந்து, அதன் வழியாக மேற்குத் திக்கில் செல்லத் தொடங்கினார். சந்தில் இருள் அடர்ந்திருந்ததன்றி, வீட்டின் கதவுகளெல்லாம் மூடி உட்புறத்தில் தாளிடப் பெற்றிருந்தன. ஆதலால், அந்த இடம் நிர்மானுஷ்யமாகவும் பயங்கரமாகவும் இருந்தது. ஷண்முக வடிவு சுமார் பதினாறு வயதடைந்த பக்குவ காலப் பெண்ணாதலால், நிரம்பவும் கனமாக இருந்த அந்த