பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23 அந்த இரவு முழுதும் பாய் மூட்டை கதவில் சார்த்தப்பட்டபடியே இருந்தது. பொழுது விடிந்தது. அந்த மாளிகையின் எஜமானியான ஹேமாபாயி என்ற பெயர் கொண்ட ஸ்திரீதனது படுக்கையை விட்டெழுந்து கண்களைத் துடைத்துக்கொண்டு வெளிக்கதவைத் திறந்து வைக்கும் பொருட்டு வாசலுக்கு வந்து வழக்கப்படி கதவைத் திறந்தாள். திறக்கவே, வெளிப்பக்கத்தில் கதவில் சார்த்தப்பட்டிருந்த பாய் மூட்டை சரசரவென்று நழுவி உட்புறத்தில் சாய்ந்து அவளது காலில் வந்து மோதியது. அவ்வாறு எதிர்பார்க்காத விதமாய் ஒரு பாய் மூட்டை வந்து தன்மீது வீழ்ந்ததைக் கண்ட ஹேமாபாயி திடுக்கிட்டு நடுங்கி வாய்விட்டு, “ஐயோ! அப்பா! என்ன மூட்டை இது?’ என்று அலறிக் கொண்டு சிறிது தூரம் அப்பால் துள்ளிக் குதித்தாள். அந்தச் சமயத்தில் அந்த வீட்டின் வேலைக்காரி வெளியிலிருந்து அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து, ஹேமாபாயியின் கூக்குரைைலக் கேட்டு வியப் படைந்து, “என்ன விசேஷம் ? என்று கேட்க, அவள் நிகழ்ந்ததை இரண்டொரு வார்த்தையில் கூறினாள். அதைக் கேட்டுப் பெரிதும் ஆச்சரியமும் ஆவலும்கொண்ட வேலைக்காரி கீழே குனிந்து பாய் மூட்டையின் இரண்டு பக்கங்களாலும் உள்புறத்தி தனது பார்வையைச் செலுத்தி அதற்குள்ளிருப்பது யாதென்று உற்று நோக்கினாள். ஒரு பக்கத்தில் தலையும், இன்னொரு பக்கத்தில் கால்களும் தெரிந்தன. அதைக்கண்ட வேலைக்காரி மிகுந்த கலக்கமும் திகிலும் அடைந்து, “ஐயோ! மூட்டைக்குள் ஒரு பினமல்லவா இருக்கிறது. யாரையோ கொன்று பாயில் வைத்துக் கட்டியல்லவா போட்டிருக்கிறார்கள். எந்தப் பாவி இதை இங்கே கொண்டுவந்து போட்டானோ தெரிய வில்லையே நாம் இதை வைத்துக்கொண்டிருந்தால், பழி நமக்கல்லவா வந்து சேரும். நாம் இதை என்ன செய்கிறது?’ என்று ஆச்சரியத்தோடு மொழிந்தாள்.

அதைக்கேட்ட ஹேமாபாயியும் சகிக்கவொண்ணாத கிலியும் கலவரமும் அடைந்து தனது கைகளைப் பிசைந்துகொண்டு கீழே