பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 9 இருக்கும்படி ஒரு வைத்தியரை வைத்துவிட்டு மற்ற மூவரையும் அழைத்துக் கொண்டு இன்ஸ் பெக்டர் கட்டிடமிருந்த இடத்திற்குச் சென்றார்.

அந்த இடத்திற்கு அருகில் நெருங்க நெருங்க லீலாவதியின் மனம் தவித்தது. இருதயம் தடதடவென்று அடித்துக்கொண்டது. கைகால்களெல்லாம் நடுங்க ஆரம்பித்தன. கூலியாட் களிடம் கொடுத்தனுப்பப் பட்டிருந்த ஒரு பெரிய லாந்தரை இன்ஸ்பெக்டர் கொளுத்திக்கையில் பிடித்துக்கொண்டிருந்தார். ஆதலால், அந்த வெளிச்சத்தின் உதவியால் அவர்கள் கட்டிடத்தின் கதவைத் திறந்துகொண்டு மேன்மாடத்திற்குச் சென்று லீலாவதி சயனக்கிரகமாக உபயோகித்துவந்த அறையை அடைந்தனர். கட்டில் முதலிய சாமான்களெல்லாம் அப்போது விலக்கப்பட்டுப் போயிருந்தன. ஆனாலும், பக்கத்திலிருந்த ஸ்நான அறைக்குள்ளிருந்த வெந்நீர் அண்டா அடுப்போடு வைத்துக் கட்டப்பட்டிருந்தது. ஆகையால், அது மாத்திரம் விலக்கப்படாமல் பழைய மாதிரியே இருந்தது. அந்த இடத்தை அடைந்தவுடனே லீலாவதியின் சிரம் சுழலவும், அறிவு மயங்கவும் ஆரம்பித்தன. கண்களில் கண்ணிர் பெருகி வழிந்து கொண்டே இருந்தது. அவள் நிற் கமாட்டாமல், அவளது கால்கள் தள்ளாடின. ஆதலால், அவள் அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டாள். நீலமேகம் பிள்ளையின் நிலைமையும் அதுபோல நிரம் பவும் பரிதாபகரமாக இருந்தது. தமது தந்தையின் உயிரைக் குடித்த வெந்நீர் அண்டாவைப் பார்க்கும் போது, அவரது உடம்பு நடுங்கியது. மயிர்கள் சிலிர்த்தன. ஒருவிதமான திகிலும், துயரமும் பெருகின. லீலாவதியின் கண்ணிரைக் காண, அவரது கண்களிலும் கண்ணிரருவி பெருகி வழிந்தது.

இன்ஸ்பெக்டரும், வைத்தியரும் சயனக் கிரகத்தையும், ஸ்நான அறையையும் வெந்நீர் அண்டாவையும் உற்று நோக்கி நன்றாக ஆராய்ச்சி செய்து முடித்தனர். லீலாவதி ஒவ்வோரிடத்