பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பூர்ணசந்திரோதயம் - 5 என்று நினைக்கிறேன். இவளுடைய முகத்தைப் பார்த்தால், நிஷகளங்கமாகவும், மகா பரிசுத்தமான தாகவும் இருக்கிறது. இவள் துர்நடத்தையில் சென்றிருக்கக் கூடிய வளாகவே தோன்றவில்லை. அப்படி இருக்க, இவளுக்கு இப்படிப்பட்ட கதி நேர்ந்தது நிரம்பவும் ஆச்சரியகரமாக இருக்கிறது. நாம் இவளை இவ்விடத்தில் வைத்திருக்கக் கூடாது. இவளை நாம் தொட்டு எடுத்துக்கொண்டு போக வேண்டாம். கூடத்தில் தொங்கிக் கொண்டிருக்கம் ஊஞ்சல் பலகை வழுவழுப்பாக இருக்கிறது. அதைக் கழற்றி எடுத்துக்கொண்டு சீக்கிரம் ஒடிவா; இந்தப் பாயோடு மெதுவாகத்துக்கி ஊஞ்சல் பலகையில் விட்டு பிறகு பலகையைப் பிடித்து மேலே தூக்கிக் கொண்டு போவோம்’ என்றாள்.

வேலைக்காரி அது நல்லயோசனை என்று ஆமோதித்து உடனே அவ்விடத்தைவிட்டு ஒட்டமாகக் கூடத்திற்கு ஒடி அவ்விடத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஊஞ்சல் பலகையைக் கழற்றி எடுத்துக்கொண்டு விசையாக வந்து சேர்ந்து பலகையை நடையில் வைத்தாள். உடனே அவர்கள் இருவரும் கால்பக்கத்திலும் தலைப்பக்கத்திலுமாக நின்று பாை யப் பிடித்து அசையாமல் ஷண்முகவடிவைத் தூக்கிப் பலகையின் மீது வைத்தனர். அவர்கள் நிரம்பவும் ஜாக்கிரதையாக அவளைத் தூக்கி எடுத்தனர். ஆனாலும் அவளது உடம்பு அசைந்தது. ஆகையால் அது அவளுக்கு மரணவேதனையாக இருந்தது. அவள் வாய்விட்டுப் பரிதாபகரமாக, “ஐயோ! அப்பா அம்மா இன்னமும் உயிர் போகமாட்டேன் என்கிறதே! என்று வீறிட்டுக் கதறினாள். அவ்வாறு அவள் தனது தேக பாதையைப் பொறுக்கமாட்டாமல் கத்திய குரலொலி அவர்களது மனதில் ஈட்டியால் குத்துவது போலப் பாய்ந்தது. அவர்களது உடம்பு நடுங்கியது; மயிர் சிலிர்த்தது. அவளது உடம்பு முழுதும் ஒரே புண்ணாக இருந்ததென்பதை அவர்கள் பிரத்தியகrமாக உணர்ந்து கொண்டவர்களாய் நிரம்பவும் ஜாக்கிரதையாகப் பலகையைப் பிடித்துத் தூக்கி அவளது உடம்பு சிறிதும்