பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 129 அசையாமல் அவளை மேன்மாடத்திற்குக் கொண்டு போய் மறைவான ஒர் அறைக்குள் பலகையோடு கீழே வைத்தனர். உடனே ஹேமாபாயி ஷண்முகவடிவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நிரம் பவும் அன்பாகவும் பட்சமாகவும் பேசத்தொடங்கி, ‘அம்மா! உன் உடம்பில் நெருப்புச் சுட்ட வரலாற்றைச் சொன்னால், அதற்குத் தகுந்தபடி நாங்கள் மருந்துகள் பூசி தக்க சிகிச்சைகளைச் செய்கிறோம் என்றாள்.

உடனே ஷண்முகவடிவு தனது கண்களைத் திறந்துகொண்டு பலஹlனமான குரலோடு பேசத்தொடங்கி, ‘அம்மா! நான் இப்போது எங்கே இருக்கிறேன்? இவ்விடத்துக்கு நான் எப்படி வந்து சேர்ந்தேன்?” என்றாள்.

ஹேமாபாயி:- பெண்ணே இந்த வீடு ராணிவாய்க்கால் சந்துக்குள் இருக்கும் வீடு. உன்னை யாரோ இந்தப் பாய்க்குள் வைத்துச் சுற்றி ஒரு தாம்புக் கயிற்றினால் இறுகக்கட்டிக் கொண்டு வந்து என்னுடைய வீட்டு வாசல் கதவில் சார்த்தி வைத்திருக்கிறார்கள். அவர்கள் எப்போது கொண்டுவந்து வைத்தார்கள் என்பது தெரியவில்லை. நேற்று ராத்திரிதான் அவர்கள் கொண்டுவந்து வைத் திருக்க வேண்டும். நான் பொழுது விடிந்தவுடன் வழக்கம்போல எழுந்துபோய் வாசற் கதவைத் திறந்தேன். பாய் மூட்டை திடீரென்று உள்ளே சாய்ந்தது. நான் திடுக்கிட்டு பயந்து கொண்டிருந்த சமயத்தில் வேலைக்காரி வந்தாள். அவள் இரண்டு பக்கங்களிலும் குனிந்து பார்த்து யாரோமனிதர் கொல்லப்பட்டுமூட்டைக்குள் வைத்துக் கட்டப்பட்டிருப்பதாகச் சொன்னாள். உடனே நாங்கள் மூட்டையை அவிழ்த்துப் பார்த்து நீ உயிரோடு இருப்பதைக் கண்டு உன்னை உள்ளே எடுத்து வந்தோம்.

ஷண்முகவடிவு:- ஒகோ அப்படியா செய்தார்கள் அவர்கள் எப்பேர்ப்பட்ட கொலை பாதகர்களாக இருக்கிறார்கள்! பார்வைக்குப் பசுக்கள்போல இருக்கிறார்கள். எதற்கும்.துணிந்த கொடும்பாவிகளாக இருக்கிறார்களே அம்மா! என்னுடைய