பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 13 j. பக்கத்தில் ஒர் ஊரிலுள்ள மடத்தில் இருந்தவர். அவர் என்னைத் திருவாரூரில் கண்டு என்மேல் துராசைகொண்டு என்னை வஞ்சித்துத் தம்முடைய மடத்துக்கு அழைத்துக்கொண்டு போனார். அப்போதும் தெய்வச் செயலாக ஒரு மனிதர் வந்து என்னை அங்கே இருந்து தப்பவைத்து அழைத்து வந்தார். அந்தச் சாமியாரை அந்த மடத்தின் சொந்தக்காரர் அவமானப்படுத்தி அவ்விடத்திலிருந்துதுரத்திவிட்டார். அவர் இந்த ஊருக்கு வந்து ஒரு மடத்தில் இருந்து வந்தார் போலிருக்கிறது. என்னுடைய பொல்லாத கிரகம் என்னை மறுபடியும் அவரிடத்திலேயே கொண்டுபோய் விட்டது. அவரே நான் முன்னே சொன்னபடி என் பக்கத்தில் படுத்து என்மேல் கை கால்களைப் போட்டவர். நான் எழுந்து விளக்கைப் பொருத்திய பிறகும், அவர் என்னை விடாமல் பலாத்காரம் செய்யத் தொடங்கினார். நான் என்னாலான வரையில் அவருக்கு நியாயம் எடுத்துச் சொல்லிப் பார்த்தேன். அவர் ஒரே பிடிவாதமாகவும் மூர்க்கமாகவும் நடந்து என்னைப் பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார். அவரிடத்திலிருந்து தப்ப வேறு வழியில் லாதிருந்தது. ஆகையால், நான் என் கையிலிருந்த விளக்கை அனைத்து, சீமை எண்ணெயைப் புடவையில் கொட்டி, நெருப்பை வைத்துக் கொளுத்திக் கொண்டேன். புடவை பற்றி எரிந்தது; கொஞ்ச நேரத்தில் என்னுடைய அறிவு மயங்கி இருளடைந்து போய்விட்டது. அதன்பிறகு என்ன நடந்ததென்பது எனக்குத் தெரியாது. உங்களுடைய நடையில் படுத்திருந்தபோதுதான் எனக்குப் பிரக்ஞை உண்டாயிற்று. இப்போது என் உடம்பு முழுதும் ஒரே புண்ணாக இருப்பதோடு, எரிச்சலும் சகிக்க முடியாததாக இருக்கிறது. என்னுடைய உயிரும் போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. என் விஷயத்தில் நீங்கள் அநாவசியமாகப் பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டாம். இனி எப்படிப்பட்ட மருந்தினாலும் என் உயிர் மீளுமென்று நான் நினைக்கவில்லை. தயைசெய்து என்னை நீங்கள் இப்படியே விட்டுவிடுங்கள்

என்றாள்.