பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 - - பூர்ணசந்திரோதயம் - 5

அவள் சொன்ன வரலாற்றைக் கேட்ட ஹேமாபாயி நிரம்பவும் துக்கித்தவள்போலத் தோன்றி, ‘அம்மா இந்த ஊர் நிரம்பவும் கெட்ட ஊர். எங்குபார்த்தாலும் துஷ்டர்களும் துன்மார்க்கர்களும் நிறைந்திருக்கிறார்கள். நீயோ மகா சிரேஷ்டமான அழகோடு கூடிய யெளவனப் பெண்ணாக இருக்கிறாய். நீதனிமையில் இராக் காலத்தில் வெளிப்பட்டதே தவறு. நீ அசலூர் மனுவி. இந்த ஊரின் யோக்கியதையைத் தெரிந்துகொள்ளாமல் இரவில் தனியாக வெளிப்பட்டு இப்படிப் பட்ட பெருத்த அபாயத்தில் மாட்டிக் கொண்டு விட்டாய். போனதைப் பற்றி இனி கவலைப்படுவதில் உபயோகமில்லை. நீ பேசாமல் படுத்துக்கொண்டிரு. நீ இறந்து போக மாட்டா யென்று நான் எண்ணுகிறேன். இதோ பக்கத்தில் ஒரு வைத்தியர் இருக்கிறார். அவர் நிரம்பவும் திறமை வாய்ந்தவர். அவரை வரவழைத்து உனக்குத் தகுந்த வைத்தியம் செய்விக்கிறேன். நீ உடம்பை அலட்டிக்கொள்ளாமல் படுத்திரு” என்று கூறியபின் வேலைக்காரியை நோக்கி, “வைத்தியரை உடனே அழைத்து

வா’ என்றாள்.

அவள் உறுதியாகக் கூறிய சொற்களைக் கேட்ட ஷண்முகவடிவு அதற்கு மேல் தான் பேசுவதில் உபயோக மில்லை என்று நினைத்து மெளனமாக இருந்துவிட்டாள். அதுவுமன்றி, அவள் முதல் நாளிரவு மடத்தில் தனக்கு நேர்ந்த விபத்தை விவரித்துச் சொன்ன பிரயாசையினால், நிரம்பும் தளர்ந்து சோர்வடைந்து உறக்கத்தில் ஆழ்ந்தாள். வேலைக்காரி வைத்தியரை அழைத்து வருவதற்காக வெளியில் போய் விட்டாள். ஹேமாபாயும் அவ்விடத்தைவிட்டுக் கீழே இறங்கி தான் கவனிக்க வேண்டிய அவசரமான சில காரியங்களை முடித்துக் கொண்டு மறுபடியும் திரும்பி வந்தாள். சிறிது நேரத்தில் வேலைக்காரி ஒரு வைத்தியரை அழைத்துக்கொண்டு ஷண்முகவடிவு இருந்த அறைக்கு வந்து சேர்ந்தாள். வேலைக்காரி ஷண்முகவடிவின் வரலாற்றை எல்லாம்