பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பூர்ணசந்திரோதயம் - 5 இருக்கையில் நீங்கள் ஏன் பயப்படவேண்டும்? உங்களுக்கு இதனால் யாதொரு கெடுதலும் ஏற்படாமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று உறுதி கூறினார். உடனே ஹேமாபாயி துணிவும் திருப்தியும் அடைந்தாள். வைத்தியர் உடனே வேலைக்காரியை அனுப்பி வாழைக் குருத்துக்களை ஏராளமாக வரவழைத்து அவற்றை மிருதுவான ஒரு மெத்தையின் மீது பரப்பி ஷண்முகவடிவை ஊஞ்சல் பலகையோடு தூக்கி, மெதுவாக அவள் தானாகவே கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பலகையிலிருந்து நகர்ந்து அந்த மெத்தையில் படுக்கும்படி செய்தார். தாம் கொணர்ந்திருந்த சீதனமான ரண மருந்துகளை அவளது உடம்பு முழுதும் அப்பும்படி செய்ததன்றி, உள்ளுக்கும் ஹிதமான சில ஒளஷதங்களைப் பிரயோகித்துவிட்டு அன்று முழுதும் அவளுக்கு நீராகாரமாகக் கொடுத்துவரும்படி ஹேமாபாயினிடம் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டுப் போய்விட்டார்.

அந்த மூன்று நாட்கள் ஷண்முகவடிவிற்கு நிரம்பவும் விபரீத மான நாட்களாக இருந்தன. அவளது உயிர் உடம் பில் இருந்ததாகவே தோன்றவில்லை. முதல்நாளில் இருந்ததைவிட, மறுநாள் மூன்றாம் நாள்களில் அவளது புண்கள் அவளை நரகவேதனைக்கு ஆளாக்கி ஆயிரம் ஊசிகள் கொண்டு குத்துவது போல வதைக்கத் தொடங்கின. சிறிதளவு கஞ்சி உட்செல்வது கூட அரிதாகிவிட்டது. அவள் வாய் ஓயாமல் அடிக்கடி அப்பா! அம்மா வென்று முக்கி முனகிக்கொண்டே படுத்திருந்தாள். ஹேமாபாயியும் வேலைக்காரியும் இரவில் ஒய்வின்றிக் கட்டிக் காத்திருந்து அவளுக்கு அடிக்கடி மருந்துகள் பூசி, ஆகாரம் கொடுத்து, புதிய வாழைக் குருத்துகள் போட்டு விசிறிப் பலவகையில் உபசரித்து வந்தனர். அந்த மூன்று நாட்களிலும் ஷண்முகவடிவு நெருப்பின் மேல் வீழ்ந்த புழுவைப் போலத் துடிதுடித்து உயிர்க்கழுவில் நின்றாள்.