பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பூர்ணசந்திரோதயம்-5 மகிழ்ச்சியும் குதுகலமும் உண்டாயின. அவள் தன் வீட்டில் இறந்துபோனால், அதனால் தனக்குப் போலீசாருடைய நிர்ப்பந்தமும் ஏராளமான பொருட்செலவும் உண்டாகும் என்ற பயம் ஒரு பக்கத்தில் இருந்து வந்தது. அதுவுமன்றி, அவளது மனதில் இன்னொரு ஆவலும் இருந்தது. ஷண்முகவடிவு அதுவரையில் தான் கண்ட பெண்களை எல்லாம் விடப் பதினாயிர மடங்கு அதிகரித்த மனமோகனசுந்தர ரூபமும், முக ஜிலுஜிலுப்பும் மிருதுவான கலியாண குணங்களும் நிறைந்த வளாய் இருந்தமையாலும், அவள் அநாதையாக இருந்தமை யாலும், தான் எப்படியாவது அவளைத் தனது மாளிகையிலேயே இருக்கச் செய்து அவளைக் கொண்டு தான் லக்ஷக்கணக்கில் பணம் சம்பாதித்துக்கொண்டு பெரிய பணக்காரியாகிவிடலாம் என்ற துராசையும் அவளது மனதில் அப்போதே உண்டாகி விட்டது. ஆகையால், அவள் இறந்து போகாமல் பிழைத்துக் கொண்டது அவளுக்கு ஒரு பெருத்த புதையல் அகப்பட்டது போல் இருந்தது. ஆனால் அவள்தன் மனதிற்குள்ளிருந்த அந்தக் கபட நினைவை வெளியில் காட்டிக் கொள்ளாமல், தான் யாதொரு பிரதி பலனையும் கருதாமல் ஜீவகாருண்யம் ஒன்றையே கருதி ஷண்முகவடிவினிடம் பிரியமாக இருந்து அவளுக்குரிய சகலமான உதவிகளையும் பணிவிடைகளையும் செய்து வருவதாகக் காட்டிக் கொண்டாள். அந்த வீடு முன்னரே கூறப்பட்டுள்ளபடி மூன்று மாடங்களைக் கொண்ட பெருத்த மாளிகையாக இருந்ததையும், அதன் உட்புற மெல்லாம் விலையுயர்ந்த பொருட்களால் கொலுமண்டபம் போல வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்ததையும் கண்ட ஷண்முகவடிவு அந்த மாளிகையின் சொந்தக்காரியான ஹேமாபாயி நிரம்பவும் கண்ணியமும் மேம்பாடும் வாய்ந்த பெரிய மனுஷி என்று நினைத்துக்கொண்டதன்றி, அவள்தன் விஷயத்தில் அபாரமான வாஞ்சையும் உருக்கமும் காட்டி இரவு பகல் அரும்பாடுபட்டு ஏராளமான பொருட் செலவு செய்து தன்னைக் காப்பாற்று வதைக் கண்டு அவளைத் தனது சொந்தத் தாயினும்