பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பூர்ணசந்திரோதயம்-5 இருந்தன. அவளது இரணங்களெல்லாம் ஆறிக்கொண்டே வந்தன. பழைய தேகபலமும் மன உற்சாகமும் நல்ல நிலைமை யும் பெருகத் தொடங்கின. அவளிடம் மற்றவர் அதிகமாய்ப் பேச்சுக் கொடுக்கக் கூடாதென்றும், அவளும் அதிகமாகப் பேச இடங்கொடுக்கக் கூடாதென்றும் வைத்தியர் கண்டித்துக் கூறி இருந்தார். ஆதலால், ஹேமாபாயி அவளிடம் அதிக நேரம் கலந்து பேசாமல், வருவதும் அவளுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்துவிட்டு இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டுப் போவதுமாக இருந்தாள். தன்னிடத்தில் ஹேமாபாயி ஒரு நாள் போல, சலிப்பாவது கடுகடுப்பாவது இல்லாத மலர்ந்த இனிய முகத்தோடு பேசி, வாஞ்சையாகிய அமிர்த சஞ்சீவியால் தன் மனதைக் குளிரச் செய்து, தன் பொருட்டு எத்தகைய பாட்டையும் பணச் செலவையும் பொருட்படுத்தாமல் ஒழுகி வந்ததைக் காணக் காண, ஷண்முக வடிவின் மனதில் நன்றியறிவும், வாத்சல்யமும், பாசமும் சுரந்து மலைபோல வளர்ந்து கொண்டு போயின. அவன் ஹேமாபாயியைக் காணும்போது ஒரு தெய்வத்தைக் காண்பதுபோலவே மதித்து ஆனந்த பரவசமடைவாள். அவள் கூறிய ஹிதமான மொழிகளைக் கேட்பது புண்பட்ட தனது மனதில் தேவாமிர்தம் சொரியப் படுவதுபோல உணர்ந்து பூரித்துப் புளகாங்கித மடைவாள். தான் கடவுளையே நம்பி இருந்ததற்கு, தனது முன் வினையின் பயனாகத் தனக்குப் பல இன்னல்கள் தோன்றினாலும் கடவுள் இடையிடையே பற்பல மனிதரது மனதில் தோன்றித் தனக்கு நன்மை புரிந்து வருகிறார் என்ற உறுதியான நம்பிக்கையை அவள் கொண்டு சதாகாலமும் கடவுளை நினைத்து நினைத்து ஸ்தோத்திரம் செய்துகொண்டே இருந்தாள். அவளது தேகமும் மனமும் பலப்படப்பட, அவள் தனது அத்தையைப் பற்றியும், கலியாண சுந்தரத்தைப் பற்றியும் நினைத்துக் கவலையுற ஆரம்பித்தாள்.