பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 139

அவள் படுக்கையைவிட்டு எழுந்து நடந்து தனது காரியங்களைத்தானே கவனித்துக் கொள்ளத்தக்கநிலைமையை அடைய, சுமார் பதினைந்து நாட்களாயின. அதற்குமேல் அவளுக்கு வைத்திய சிகிச்சை தேவையில்லை என்று வைத்தியர் முடிவு கூறிய தினத்தன்று ஹேமாபாயி நூறு ரூபாய் பணமும், விலையுயர்ந்த ஒரு ஜரிகைச் சால்வையும் வைத்தியருக்கு சன்மானம் அளித்தாள். தன் பொருட்டு அவள் அவ்வாறு பணச் செலவு செய்வதைக்கண்ட ஷண்முகவடிவு எவ்விதமான கைம்மாறும் கருதாமல் அவள் தன்மீது வைத்துள்ள அபாரமான வாத்சல் யத்திற்கு ஈடாகத் தான் செய்யக்கூடியது என்ன இருக்கிறதென்று நினைத்து சகிக்கவொண்ணாத மன இளக்க மும் சஞ்சலமும் அடைந்தவளாய் அவளை நோக்கி, ‘அம்மா! என்னைப் பெற்ற தாயை நான் என் கண்ணால் பார்க்கவே இல்லை. அந்த மனக்குறையை நீங்கள் அடியோடு நிவர்த்தி செய்து விட்டீர்கள். என் சொந்தத் தாய் இருந்தால் கூட, அவள் என் விஷயத்தில் இப்படி நடந்து கொள்வாளோ என்ற சந்தேகம் என்மனசில் உண்டாகிறது. முன்பின்பழக்கமென்பதே இல்லாத என் விஷயத்தில் நீங்கள் இந்தப் பதினைந்து தினங்களாகச் செய்த செலவுகளும், பட்ட பாடுகளும், கொண்ட கவலைகளும் கணக்கிலடங்குமா? இவைகளுக்கெல்லாம் நான் உங்களுக்கு என்ன பதில் உதவி செய்யப் போகிறேன்! நானோ பரம ஏழை; மனிதர் அற்ற அநாதை; பிறந்த முதல் துன்பங்களையும் துயரத்தையும் அனுபவிப்பதற்கென்றே உடம்பு எடுத்த மகாபாவி. நீங்கள் என்னுடைய சொந்தத் தாயை விடப் பன்மடங்கு மேலானவர்களென்று சதா காலமும் எண்ணிக் கொண்டிருப்பதோடு, பிறரிடம் எவ்வித உதவியும் வேண்டாத அமோகமான நிலைமையில் நீங்கள் இப்போது இருப்பதுபோல எப்போதும் உங்களை வைக்கும் படி கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருப்பதே நான் என்னுடைய நன்றியறிதலைக் காட்டுவதற்குச் சமானம்’ என்று மேலும்