பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பூர்ணசந்திரோதயம் - 5 தூங்குகிறதை நாம் பார்த்ததில்லையா? அதுபோல, நம்முடைய உடம்பு துன்பம் துயரம் என்னும் பூச்சிகள் சதாகாலம் நிறைந்து கடித்துக்கொண்டிருக்கும் ஒரு வீடு. இதற்குள்ளிருந்து அந்தக் கடிகளை இலட்சியம் செய்யாமல் நம்முடைய ஜீவன் இருந்தாலன்றி, மனிதர் கடைத்தேறுவது கடினம். துக்கமும், துன்பமும், அபாயங்களும் நிறைந்த இந்த உலகில் நாம் கடைசி வரையில் சந்தோஷமாக இருந்துதான்நம்முடைய வாழ் நாளைக் கடத்தவேண்டுமே அன்றி, அவைகளை விலக்கிவிட்டு நாம் நிம்மதியாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது கொஞ்சமும் சாத்தியமில்லாத காரியம். ஆகையால், நீ எதைப் பற்றியும் கவலை என்பதே கொள்ளாமல் எப்போதும் சந்தோஷமாக இருக்க முயற்சி செய். உன்னைப் பற்றியாவது, மற்றவரைப் பற்றியாவது நீ கவலைப்படுவதில் யாதொரு பலனும் உண்டாகப் போகிறதில்லை. நம்மை யெல்லாம் படைத்த கடவுள் நம்மைப் பற்றிய கவலைகளை ஏற்றுக் கொள்ளக் கடமைப்பட்டவராய் இருக்க, அதைப் பற்றி நாம் கவலைப்பட்டு நம்மால் ஆவது ஒன்றுமில்லை. வருவது வந்தே தீரும்’ என்றாள்.

அதைக் கேட்ட ஷண்முகவடிவு ஒருவிதமான மனோதிடமும் உற்சாகமும் கொண்டவளாய், ‘அம்மா! நான்தான் இந்த உலகில் நிரம்பவும் கஷ்டப்பட்டவளென்று நினைத்திருந்தேன். நீங்கள் எனக்குமேல் எவ்வளவோ அதிகமாகப் பட்டுத் தேறிய பழம் புண்ணாளியாக இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதுபோல இந்த உலகில் அநேகமாய் எல்லோரும் இப்படித்தான் சஞ்சலப். பட்டுக்கொண்டிருப்பார்கள்போலிருக்கிறது. நீங்கள் சொல்லும் புத்திமதி என் மனசுக்கு ஒருவித ஆறுதலை உண்டாக்குகிறது. ஆனாலும், எனக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் நீங்குகிற வரையில் அவற்றைக் குறித்து மனம் கவலைப்படாமல் எப்படி இருக்குமென்பதுதான் தெரியவில்லை” என்றாள்.