பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 145 ஆதியோடு அந்தமாக ஹேமாபாயிடம் தெரிவித்தாள். தனது அத்தை நோயாக வீழ்ந்தபிறகு கமலம் தஞ்சைக்கு வந்தது, தான் உண்டியல் மாற்றத் திருவாரூர் போன காலத்தில், பண்டாரத்தினால் தனக்கு அபாயம் நேர்ந்தது, அதன் மூலமாகத் தனக்குக் கலியான சுந்தரத்தின் நட்பு ஏற்பட்டது, அவனுக்கும் தனக்கும் கலியாணம் நடத்த முடிவு செய்தது, பிறகு அவன் பட்டமகிஷியின் அபாயத்தை விலக்குவதற்காகப் பூனாவிற்குச் சென்றது, கோலாப்பூரிலிருந்து தனக்குக் கடிதம் வந்தது, தான் உடனே புறப்பட்டு அந்த ஊருக்குப் போனது, அவ்விடத்தில் தனக்கும் ஒரு ஸ்திரீக்கும் நட்பு ஏற்பட்டது, அந்த ஊர்ச் சிறைச்சாலையில் தான் தெரிந்துகொண்ட விஷயங்கள், பிறகு தான் தஞ்சைக்கு வந்தது, மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகையில் தனக்கு அபாயம் நேர்ந்தது, அவ்விடத்திலிருந்து தான் தப்பித்து வந்த பிறகு வழியில் போலீஸ் ஜெவான்கள் தன்னைப் பிடித்துப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போனது, அவ்விடத்திலிருந்த இன்ஸ்பெக்டர் தனக்கு உதவி செய்து, தன்னைத் தனது அக்காள் கொடுத்திருந்த விலாசமுள்ள வீட்டிற்கு அழைத்துப் போனது, அவ்விடத்தில் நடந்த சம்பாஷணை, அதன் பிறகு தான் இன்ஸ்பெக்டரை விட்டுப் பிரிந்து மடத்திற்குப் போனது முதலிய சகலமான விவரங் களையும் ஒன்றுவிடாமல் தெரிவித்தாள். அதைக்கேட்ட ஹேமா பாயி அப்படியே ஸ்தம்பித்துப் போனாள். பட்டமகிஷி, அம் மணிபாயி, மருங்காபுரி ஜெமீந்தார் முதலியோரது விஷயத்தில் ஷண்முகவடிவு வெளியிட்ட விஷயங்கள் ஹேமா பாயின் மனதில் எண்ணிறந்த யூகங்களையும், பலவிதமான யோசனைகளையும் அளவற்ற வியப்பையும் பிரமிப்பையும் உண்டாக்கின. அவளுக்குத் தான் என்னவிதமான சமாதானம் சொல்வதென்பதை அறியாதவளாய்ச் சிறிது நேரம் தத்தளித்தபின் ஹேமாபாயி, ‘அம்மா ஷண்முகவடிவு.! உன் விருத்தாந்தம் நிரம்பவும் பரிதாபகரமாக இருக்கிறது. முன் காலத்தில் சீதாதேவி, பாஞ்சாலி, தமயந்தி முதலியோருக்குத்