பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 11 வைத்தனர். தமது தந்தையின் விகாரமான சவத்தைக் கண்ட நீலமேகம் பிள்ளையின் மனம் எவ்வாறு பதறியிருக்கும் என்பதை வாசகர்கள் யூகித்துக் கொள்வதே நன்று. தந்தை யிடத்தில் அபாரமான வாஞ்சையும் பயபக்தியும் வைத்திருந்த சற்புத்திரரான நீலமேகம் பிள்ளையின் துயரம் வாக்கிலும், சொல்லிலும், மனதிலும் அடங்காததாக இருந்தது. அதைக் கண்ட இன்ஸ்பெக்டர், வைத்தியர்கள் சவத்தைப் பரீட்சிப் பதைப் பார்த்தால் நீலமேகம்பிள்ளையின் துயரம் இன்னமும் அதிகமாகப் பெருகுமென்று நினைத்தவராய் அவரை அழைத்துக் கொண்டு சிறிது தூரத்திற்கப் பால் போனார். லீலாவதி சொன்னபடி அந்த ஜெமீந்தார் வெந்நீர் அண்டாவில் மூச்சுத் திணறி இறந்தாராஅல்லது விஷத்தினாலாவது, அல்லது, அடித்துக் கொல்லப்பட்டதனாலாவது இறந்தாரா என்பதை வைத்தியர்கள் ஆராயத் தொடங்கினர். தனியாகச் சென்ற நீலமேகம்பிள்ளை இன்ஸ்பெக்டரை நோக்கி, “ஐயா! நாம் பார்த்தவரையில் இந்த அம்மாள் சொன்னபடி எல்லாக் குறிப்புகளும் இருக்கின்றன. பிரேத ஆராய்ச்சியும் அதையே உறுதிப்படுத்தும் என்பதைப் பற்றி சந்தேகமே இல்லை. வைத்தியர்களும் அதே அபிப்பிராயத்தை வெளியிடும் பட்சத்தில், நான் கேட்டுக் கொண்டபடி நீங்கள் இந்த விஷயத்தை நியாயஸ்தலத்துக்குக் கொண்டு போகாமல் விட்டுவிடுவீர்களல்லவா.” என்றார்.

உடனே இன்ஸ்பெக்டர், ‘ஆம். தடையென்ன! நான் இதை விட்டுவிடத்தான்வேண்டும். இந்த மரணம்தற்செயலாக நேர்ந்த துர் மரணம். ஆகையாலும், இவர் இறந்தத்ற்கு இவரே உத்தரவாதி யன்றி, வேறே யாரும் உத்தரவாதி அல்ல, ஆகையாலும், நாம் இந்த வழக்கை நியாயஸ்தலத்திற்குக் கொண்டுபோக வேண்டுமென்ற அவசியமில்லை. சட்டப்படி பார்த்தால், நான் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் நீதிஸ்தலத்தாருக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியமே. ஆனால் இந்த விஷயத்தை நாம் மேலுக்குத் தெரிவிப்பதால்