பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 147 செய்கிறேன். உன்னுடைய ஊருக்கும் நீ உடனே ஒரு கடிதம் எழுது; அதில் அவர்களுடைய செலவுக்காக கொஞ்சமும் பணமும் வைத்து அனுப்புவோம். அங்கேயிருக்கும் வேலைக்காரியும் அம்மன்பேட்டையிலிருந்து வந்த பெண்ணும் உன்னுடைய அத்தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி நீ எழுது. அதை இன்றைய தபாலிலேயே நான் அனுப்பி வைக்கிறேன். உன் அக்காளைக் கண்டுபிடித்த வுடனே, அவளுடைய யோசனையைக் கேட்டுக் கொண்டு உங்கள் அத்தையையும் இங்கேயே வரவழைத்து வைத்துக் கொள்ளலாம். அதன்பிறகு எல்லோருமாக இங்கேயே இருந்து விடலாம். அல்லது உங்களுக்கு இங்கே இருக்க இஷ்டமில்லா விட்டால் நான் என் சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு இந்த வீட்டையும் விற்றுவிட்டு உங்களுடைய ஊருக்கே வந்து விடுகிறேன்’ என்றாள்.

அதைக் கேட்ட ஷண்முகவடிவு மிகுந்த மனயெழுச்சி அடைந்தவளாய் அவளை நோக்கி, ‘ஏன் அம்மா என் அக்காளைக் கண்டுபிடித்து விடலாமென்கிற நம்பிக்கை உங்கள் மனசில் உண்டாகிறதா? சுமார் எத்தனை நாளில் தகவல் தெரியும்? நான் என்னுடைய சொந்த ஊருக்கு உடனே போய் என்னுடைய அத்தையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் என் மனசில் ஒரு பக்கத்தில் வதைக்கிறது. ஆனாலும் நான் இவ்வளவு தூரம் வந்தபின், என் அக்காளைக் கண்டுபிடிக்காமல் போவதற்கும் மனம் இசையவில்லை. அன்றைய தினம் இரவில் எனக்கு உதவி செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரையும் நான் மறுபடி பார்க்க வேண்டும். அவரும் என் அக்காள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிப்பதாக உறுதி சொல்லியி ருக்கிறார். அதோடு நீங்களும் பிரயாசைப்பட்டு, சீக்கிரத்தில் அவளுடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து நான் அவளைப் பார்க்கும் படி செய்தால், அதுவே எனக்குக் கோடி ரூபாய் சன்மானம் செய்ததுபோல இருக்கும். நான் அதிகமான