பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 151 தடவை.போய், அங்கே இருக்கும் ராஜ ஸ்திரீகளைப் பார்த் திருக்கிறேன். அவர்கள் பெயருக்கு மாத்திரம் ராஜ ஸ்தீர்களே அன்றி, உண்மையில் பார்த்தால் உன்னுடைய கால் நகத்தின் அழகுகூட அவர்களுடைய முகத்தில் இல்லை. இவ்வளவு அற்புதமான அழகோடு உன்னைப் படைத்த ஈசுவரன் உன்னை தக்க ஸ்தானத்தில் வைக்காமல், அநாதையாகவும் ஏழ்மை நிலைமையிலும் வைத்து எத்தனையோ அபாயங் களுக்கும் துயரத்துக்கும் உன்னை ஆளாக்குகிறான் பார்த்தாயா? ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால், கடவுளைப் போல ஈவிரக்கமற்ற கொடியவன் எவனும் இருக்க மாட்டான் என்றே நான் நினைக்க வேண்டியிருக்கிறது. உன்னைப் பெற்ற தாய் இப்போது உயிரோடிருந்து உன்னைப் பார்த்தால், அவளுடைய மனம் எப்படிக் குளிர்ந்து பரவசமடையும் தெரியுமா? இத்தனைக்கும் உன் உடம்பில் நல்லதாக யாதொரு நகையுமில்லை. நீ ஒரே ஒரு பட்டுச்சேலை கட்டியிருக்கிறாய். அது ஒன்றே இவ்வளவு அழகு கொடுக்கிறதே. இன்னும் நீ வைரக் கம்மல், வைர மூக்குப் பொட்டு, வைர மாட்டல், வைர அட்டிகை முதலியவற்றை அணிந்துகொண்டால், அது எப்படியிருக்குமோ? அப்போது உன்னை யாராவது பார்த்தால், உடனே கண் திருஷ்டி தோஷம் அவசியம் உணடாகிவிடும். அந்த நகைகளெல்லாம் என்னிடம் இருக்கின்றன. நான் குமரியாயிருந்த காலத்தில், நான் அவைகளைப் போட்டுக் கொண்டிருந்தேன். இப்போது கிழவியாய்விட்டேன். அதுவுமன்றி, என் புருஷரும் இறந்து போய்விட்டார். அந்த நகைகளை நான் போட்டுக்கொள்ள சந்தர்ப்பம் இல்லா மையால், எல்லாவற்றையும் பெட்டியில் வைத்துப் பூட்டியிருக்கிறேன். அவைகளையெல்லாம் உனக்குப் போட்டுப் பார்க்கவேண்டுமென்ற ஓர் அவாசில நாட்களாக என் மனசில் இருந்து வருகிறது. அவைகளை எல்லாம் உனக்கே கொடுத்து விடவேண்டுமென்ற நினைவும் உண்டாகிறது. ஆனால், நீ அவைகளை ஏற்றுக்கொள்ள ஒருவேளை ஏதாவது ஆட்சேபனை சொல்வாயென்ற பயமும் இருந்து வருகிறது. நீ