பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 153 அன்பாகக் கடிந்து, ‘அம்மா! ஏன் நீ இப்படி ஆத்திரப்படுகிறாய்? இந்த நகைகளெல்லாம் பெட்டியிலிருந்து அழுக்கடைவதை விட உன் உடம் பிலேயே இருக்கட்டுமே. நீ ஊருக்குப் போகையில் வேண்டுமானால் கழற்றிவிடலாம். அதுவரையில் நீயே போட்டிரு’ என்றாள். அதைத் தடுக்க மாட்டாமல் ஷண்முகவடிவு அதற்கும் இணங்கினாள். அடுத்த தினங்களில் அது ஷண்முகவடிவிற்குச் சர்வசாதாரணமாகிவிட்டது. அவள் படாடோபமான பட்டாடைகளையும் வைர ஆபரணங்களையும் அணிந்துகொண்டே இருந்ததன்றி, அவைகளைப் பற்றி மனக் கிலேசமடையவுமில்லை; ஹேமாபாயிடம் எவ்வித ஆட்சேபமும் சொல்லவுமில்லை.

மேலும் இரண்டு நாட்கள் கழிந்தன. ஷண்முகவடிவு எப்போதும்போல இயற்கையழகும் செயற்கைஅழகும் வாய்ந்து ஜெகஜ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருந்தாள். தான்.அவ்வாறு ஒரே அழகுத் திரளாகவும், மனமோகன சுந்தர ரூபிணியாகவும் இருந்ததை அவள் சிறிதும் உணராமல், ஹேமாபாயின் தாட்சண்யத்திற்காக தான் அவ்வாறு செய்ய வேண்டியது தனது கடனென அவள் நினைத்திருந்தாள். அன்றையதினம் பகற் போஜனம் முடிவடைந்தபிறகு வீட்டைவிட்டு வெளியில் போயிருந்த ஹேமாபாயி மாலை 7 மணி சுமாருக்கு வீட்டுக்குத் திரும்பிவந்து மிகுந்த ஆவலோடும், படபடப்போடும் மேன் மாடத்திலேறி, “ஷண்முகவடிவூ ஷண்முகவடிவூ! உனக்கு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன். உன் அக்காள் கமலம் அகப்பட்டுவிட்டாள். மருங்காபுரி ஜெமீந்தார் அவளுக்கு ஏதாவது கெடுதல் செய்யாதிருப்பாரோ வென்று நீ சந்தேகித்தாயே! அப்படி எதுவும் நடக்கவில்லை. அவள் பத்திரமாகவே இருக்கிறாள்’ என்றாள். -

அந்த எதிர்பாராத நல்ல சங்கதியைக் கேட்ட ஷண்முகவடிவு ஆனந்தப் பெருக்கினால் தன்னை மறந்து துள்ளிக் குதித்து ஹேமாபாயிடம் ஓடிவந்து, ‘ஆ! அப்படியா என் அக்காள்