பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பூர்ணசந்திரோதயம்-5 திறமையாகவும் நிஷ் கபடமாகவும் ஹேமாபாயி நடந்து வந்தாள். ஆதலால், ஷண்முகவடிவு அவளைப் பற்றி எள்ளளவும் சம்சயமே கொள்ளாமல், அவள் சொன்னதை உண்மையென்று எண்ணிவிட்டாள். ஆகையால், தான் இன்னும் அரைநாழிகையில் தன் அக்காளைப் பார்த்து ஆனந்தமடைய லாம் என்று அந்த மடந்தை நினைத்து மிகுந்த மனவெழுச்சி கொண்டுதுடிதுடித்திருந்தாள்.

வண்டி சிறிது தூரம் சென்றது. அதுவரையில் மெளனமாக இருந்த ஹேமாபாயி தான் நெடுக அவ்வாறு வாய் திறவாமல் இருந்தால், அது சந்தேகம் உண்டுபண்ணுமென்று நினைத்து, ‘அம்மா ஷண்முகவடிவு தெய்வத்தின் திருவிளையாட்டு எவ்வளவு விநோதமாக இருக்கிறது பார்த்தாயா? நீ இதுவரையில் உன் அக்காளைத் தேடினாயே; அவள் உன் கண்ணில் பட்டாளா? அவள் இருந்த இடம் இன்று எனக்கு வெகு சுலபத்தில் தெரிந்து போயிற்று பார்த்தாயா? நீ என் வீட்டிற்கு வரவும், நான் உனக்கு உதவி செய்யவும், அதனால் நமக்குள் பிரியமும் சிநேகமும் ஏற்படவும், உன் அக்காளைக் கண்டுபிடிக்கும் சந்தோஷம் என்னால் ஏற்படவும் கடவுள் சூழ்ச்சி செய்திருக்கிறார் பார்த்தாயா? இப்படி யெல்லாம் விஷயம் நேராவிட்டால் உனக்கும் எனக்கும் எப்படி சந்திப்பு ஏற்படப்போகிறது? அப்படியே சந்திப்பு ஏற்பட்டாலும் உனக்கு என்னிடத்தில் அந்தரங்கமான பிரியமும் உண்மையான விசுவாசமும் ஏற்படுமா? கடவுள் இப்படித்தான் ஏதாவது ஒர் அபாயத்தைக் காட்டி, புதிய மனிதர்களை ஒருவருக்கொருவர் சிநேகம் பண்ணி வைக்கிறார். ஆனால் என்மனசில் இப்போதே ஒருவிதமானகவலையும் விசனமும் உண்டாகின்றன என்றாள்.

ஷண்முகவடிவு, ‘உங்கள் மனசில் எதைப்பற்றிக் கவலையும் விசனமும் உண்டாகின்றன? என்றாள்.

ஹேமாபாயி, வேறொன்றுமில்லை. இந்த இருபது தினங்களாக நீ என்னோடுகூடவே இருந்தாய். நான் உன்னை என்