பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 159 சொந்த மகளைவிட அதிக விசேஷமானவளாக நினைத்து நீ இனி எப்போதும் என்னை விட்டுப் பிரியமாட்டாய் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த உறுதி இப்போது இந்த எதிர்பாராத சம்பவத்தால் கலகலத்துத் தளர்ந்து போய்விட்டது. நீ உன் அக்காளைக் கண்டால், அவள் என்ன சொல்லுவாளோ? நீ இந்த இருபது நாட்களாய் என்னோடுகூட இருந்து என்னுடைய குணத்தையும் நான் உன்மேல் வைத்திருக்கும் ஆசை எவ்வளவென்பதையும் நன்றாகத் தெரிந்து கொண்டி ருக்கிறாய். அவளுக்கு நான் புது மனிஷிதானே. நீ என்னிடம் வைத்திருக்கும் விசுவாசத்தைப் போல அவளும் வைப்பாள் என்று நான் எதிர்பார்க்க முடியாதல்லவா. அவள் லக்ஷப் பிரபுவான சோமசுந்தரம் பிள்ளையின் சுவிகாரப் பெண். அவளுக்கு அபாரமான செல்வம் கிடைத்திருக்கிறது. அப்படிப் பட்ட மகோன்னத பதவியில் உள்ளவள் என்னைப் போன்ற வர்களையும் என்னுடைய அற்ப சொத்துக்களையும் ஒரு பொருட்டாக மதிக்கப் போகிறாளா? நீயும் அத்தையும் என்னோடு இருக்கக்கூடாதென்றாவது, அல்லது நான் உங்க ளோடு இருக்கக் கூடாது என்றாவது அவள் சொல்லி விடுவாளானால், அதன்பிறகு என்னுடைய மனசைநான் எப்படி சமாதானம் செய்துகொள்ளப் போகிறேன்?’ என்று நிரம்பவும்

உருக்கமாகக் கூறினாள்.

அதைக் கேட்ட ஷண்முகவடிவின் மனதும் கண்களும் கலங்கின. ஹேமாபாயி தனது விஷயத்தில் உண்மையிலேயே அபாரமான வாஞ்சை வைத்திருக்கிறாள் என்ற நினைவினால் ஷண்முகவடிவு நிரம் பவும் இளகிப் போனவளாய் அவளை நோக்கி, ‘அம்மா என்னுடைய அக்காள் நிரம்பவும் பெருந் தன்மையும் சுலபத்தில் இளகும் மனமும் உடையவள். நடந்த விஷயங்களை எல்லாம் அவள் அறிவாளானால், நான் உங்கள் விஷயத்தில் எப்படிப்பட்ட மதிப்பும் உணர்ச்சிகளும் கொண்டிருக்கிறேனோ அதுபோலவே அவளும் கொண்டு பூ.ச.V-11