பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பூர்ணசந்திரோதயம் - 5 என்னை விடப் பத்து மடங்கு விசேஷமான பிரியத் தோடு நடந்து கொள்வாள் என்பதை நீங்கள் நிச்சயமாக நம்பலாம். என்றாள்.

ஹேமாபாயி நிரம்பவும் மகிழ்ச்சி அடைந்தவள் போலப். புன்னகை செய்து, “ஆம், ஆம் கொஞ்ச நேரத்துக்குமுன் நான் அவளைக் கண்டு அவளிடம் பேசிய சொற்ப அவகாசத்தில் அவள் நிரம்பவும் மேலான மனப்போக்குடையவள் என்பது எளிதில் தெரிந்தது. அவளுடைய முகத்தைப் பார்த்தால்,அவள் நிஷ்களங்கமான மனசுடையவள் என்பது நன்றாக விளங்கியது. ஆனாலும், எந்த விஷயமும் முடிவடைகிற வரையில் சந்தேகப்படுவதே மனித சுபாவமல்லவா? அதனால் என் மனம் என்னையும் மீறி ஒருவிதமான சஞ்சலமடைகிறது’ என்றாள். அவ்வாறு அவர்கள் இருவரும் சம்பாவித்துக் கொண்டிருக்க, வண்டி அந்த ஊர் அரண்மனைக்குள் புகுந்து இருண்டிருந்த பல சந்து பொந்துகளின் வழியாகச் சென்று பல மாடங்களையும் கூடங்களையும் மகால்களையும் கடந்து முடிவில் ஒரு வாசலண்டை போய் நின்றது. வண்டிக்காரன் கீழே இறங்கி வந்து கதவைத் திறந்துவிட்டான். ஹேமாபாயியும் ஷண்முகவடிவும் உடனே கீழே இறங்கி அருகிலிருந்த வாசலுக்குள் நுழைந்தனர்.

அந்த வாசலை அடுத்தாற்போல உட்புறத்தில் மேன்மாடப் படிக்கட்டு ஒன்று தென்பட்டது. ஹேமாபாயி ஷண்முகவடிவை அழைத்துக்கொண்டு அதன் வழியாக ஏறி மேலே சென்று முதல் மாடத்தை அடைந்தாள். அந்த இடத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக ஏழு உப்பரிகைகள் இருந்தன. முதலிரண்டு உப்பரிகைகள் தவிர மற்ற மேல் உப்பரிகைகளில் எல்லாம் மகாராஜாவின் பத்னிமார் வசித்து வந்தனர். அந்த மாடங்களில் ஒன்றிலேயே பூர்ணசந்தி ரோதயத்தின் வாசஸ்தலமும் இருந்தது. ஹேமாபாயி ஷண்முகவடிவை அவ்விடத்திற் கெல்லாம் அழைத்துப் போகாமல் முதல் உப்பரிகையைக் கடந்து மறுபடியும் படிகட்டின் வழியாக மேலே ஏறி இரண்டாவது உப்பரிகையை