பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 16.1 அடைந்தான். அவள் சென்ற இடங்களெல்லாம் அலங்காரமே மயமாக நிறைந்து கந்தர்வலோகம் போலக் காணப்பட்டது. பூர்ணசந்திரோதயத்தின் கலியானத்தை உத்தேசித்து அவ்வித அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று ஹேமாபாயி ஷண்முகவடிவினிடம் கூறியவண்ணம் அவளை அழைத்துக் கொண்டு இரண்டாவது உப்பரிகையிலிருந்த ஒரு விடுதிக்குள் நுழைந்தாள்.

அந்த விடுதி ஒரு பிரத்தியேகமான பங்களாவைப் போல அலங்காரமான புஷ்பத் தொட்டிகளும், நிலைக் கண்ணாடி களும், ஸோபாக்களும், தந்தக் கட்டில்களும், பஞ்சணைகளும், சலவைக்கல் நாற்காலிகளும், அற் புதமான அழகிய படங்களும் நிறைந்த ரமணியமான ஸ்தலமாக இருந்தது. அந்த விடுதியை அடுத்தாற்போல நாலைந்து சயன அறைகள் இருந்தன. மேற்படி அறைகள் மேற்படி விடுதியை விட ஆயிரம் மடங்கு சிறப்பாக வும் வசீகரமாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அவ்விடத்தை அடைந்த ஹேமாபாயி பக்கத்திலிருந்த ஒரு வாசற் படியைக் காட்டி, “அதோ பார்த்தாயா வாசற் படி; அதற்குள்ளேதான் சோமசுந்தரம் பிள்ளையின் சம்சாரமும் உன் அக்காளும் இருக்கிறார்கள்’ என்றாள்!

அப்போது ஷண்முகவடிவின் ஆவல் உச்ச நிலையை அடைந்திருந்தது என்றே சொல்லவேண்டும். அவள் வீட்டை விட்டுக் கிளம்பியது முதல் அவளது மனதில் கமலத்தின் நினைவே நினைவாக இருந்து வதைத்துக் கொண்டிருந்தது. ஆகையால், அவளது உண்மையான வடிவத்தைக்காண்பதற்காக அவளது கண்கள் ஆவலோடு அங்குமிங்கும் பார்த்துப் பார்த்துப் பூத்துப் போய்விட்டன. அவளது கைகால்களெல்லாம் பதறின. ஹேமாபாயி ஒர் அறையைச் சுட்டிக் காட்டியவுடனே, அந்த மடந்தை தனது ஆவலில் தன்னை மறந்து ஆவேசங் கொண்டவள் போல விரைவாக அந்த அறையின் வாசற் படியை