பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பூர்ணசந்திரோதயம்-5 அடைந்து, “அக்கா கமலம்’ என்று நிரம்பவும் ஆவலோடு கூப்பிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

உட்புறத்தில் ஒரு ஸோபாவின் மீது உட்கார்ந்திருந்த நாற்பது வயதுள்ள ஒரு ஸ்திரீ சரேலென்று எழுந்து ஆசையோடு எதிர் கொண்டுவந்து, “ஆகா! ஷண்முவடிவா! வா வா வா! எங்கே ஹேமாபாயியம்மாள்?’ என்று கூறிய வண்ணம் வாசற்படியை நோக்க, அவ்விடத்தில் நின்ற ஹேமாபாயி, “இதோ இருக்கிறேனே! இந்தப் பெண்தான் ஷண்முகவடிவு. எங்கே கமலம் அம்மா ஷண்முகவடிவு! இந்த அம்மாள்தான் சோமசுந்தரம் பிள்ளையினுடைய சம்சாரம்’ என்றாள். அதைக் கேட்ட ஷண்முகவடிவு தன்னை எதிர் கொண்டு வரவேற்ற ஸ்திரீயைப் பார்த்து, ‘ஓகோ அப்படியா! இவர்கள் தானா எங்களுடைய குடும்ப ரக்ஷகருடைய பாரியாள். சந்தோஷ மாயிற்று. என் அக்காள் கமலம் இவர்களைப் பற்றி எனக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதியிருக்கிறாள். அப்பேர்ப்பட்ட சிரேஷ்டமான புண்ணியாத்மாக்களை எப்போது பார்க்கக் கிடைக்குமோ என்று நான் எதிர்பார்த்தது இன்றுதான் லயிக்கிறதுபோலிருக்கிறது. எங்கே கமலத்தைக் காணோமே?” என்றாள்.

அந்த ஸ்திரீ ஷண்முகவடிவை ஒரு லோபாவின் மேல் உட்காரச் செய்து, ‘ஆம் அம்மா கமலம் உன்னைப் பற்றியும் உன்னுடைய நல்ல குணங்களைப் பற்றியும் தான் சதாகாலமும் எங்களிடம் பேசிக்கொண்டிருப்பாள். எங்களுக்கும் உன்னைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் கொஞ்சமாக இல்லை. எங்களுடைய ஜோலிகளைவிட்டு அங்கே வரமுடியவில்லை. நீ உன் அத்தையைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாய்ப் போனதால் உன்னையும் வரவழைக்க இயலாமல் போய்விட்டது. நல்லவேளையாக யாரோ வேறு சில மனிதரை உனக்குப் பதிலாக அங்கே வைத்துவிட்டு வந்தாயே. நல்லதாயிற்று. உன் அக்காள் கமலம் உன்னை வாசற்