பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1.63 படியிலிருந்தே அழைத்துக்கொண்டு வரவேண்டுமென்று இப்போதுதான் இந்தப் பக்கத்து வாசல் வழியாகக் கீழே போனாள். நீங்கள் பின் பக்கத்து வழியாக உள்ளே வந்துவிட்டீர்கள்’ என்றாள்.

அதைக்கேட்ட ஹேமாபாயி, “ஒகோ! அப்படியா நன்றாகப் பழகினவர்களுக்கே இந்த அரண்மனைக்குள் ஒரு குறித்த இடத்துக்கு வந்து திரும்பிப்போவது நிரம்பவும் துர்லபமான காரியம். என்னைப் போன்ற புதியவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஏதோ ஒரு வழியாக வந்து நான் உங்களிடம் சேர்ந்து விட்டேனே! அதுவே ஒரு பெரிய காரியமல்லவா? அதிருக்கட்டும். கமலம் எந்த வழியாகப் போனாள்? அதைக் காட்டுங்கள். நான் போய் அவளை அழைத்துக்கொண்டு வருகிறேன். இல்லாவிட்டால் நாங்கள் வருவோம் வருவோமென்று வழிபார்த்து அவள் அவ்விடத்திலேயே காத்திருப்பாள்’ என்றாள்.

உடனே அந்த ஸ்திரீ, “ஆம், ஆம்; அப்படித்தான் செய்ய வேண்டும். நீங்கள் இங்கே வந்துவிட்டீர்கள் என்பது அவளுக்குத் தெரியாதல்லவா. நீங்கள் வருவீர்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்து அவ்விடத்திலேயே இருப்பாள். தன்னுடைய தங்கையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் அவளுக்குச் சாப்பாட்டில் கூட மனம் செல்லவில்லை. அவள் இதோ இந்த வாசலின் வழியாகப் போனாள்’ என்று பக்கத்திலிருந்த ஒரு வாசலைச் சுட்டிக் காட்டினாள்.

உடனே ஹேமாபாயி, “சரி; நான் போய் உடனே அவளை அழைத்து வருகிறேன். அவளிருக்கும் இடத்தை நாடி இவள் வந்தும் அவள் கீழே போய்விட்டாள் பாருங்கள். இன்னும் காலம் வரவில்லை. எதற்கும் காலமென்பது ஒன்று உண்டல்லவா. அது நேர்ந்தால்தான் எதுவும் கைகூடும்’ என்று கூறியவண்ணம் தனக்குக் காட்டப்பட்ட வாசலின் அப்பால் போய் மறைந்து போய்விட்டாள்.