பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பூர்ணசந்திரோதயம் - 5 பிறகு அந்த ஸ்திரீஷண்முகவடிவினிடம் பேச்சுக்கொடுத்து நிரம்பவும் அன்பாகவும் வாஞ்சையாகவும் அவளது குடும்ப யோக rேமங்களைப் பற்றியும், அவளுக்கு நேர்ந்த பல துன்பங்களைப் பற்றியும் வினாவிய வண்ணமிருக்க, சுமார் அரைநாழிகை சாவகாசம் கழிந்தது. அதற்குள் அவர்களிருந்த அறையைச் சுற்றிலும் திறக்கப்பட்டிருந்த கதவுகள் ஒவ்வொன்றாய் மெதுவாகச் சாத்தி மூடப்பட்டன. அதை ஷண்முகவடிவு கவனிக்காதபடி நிரம்பவும் தந்திரமாக யாரோ மனிதர் வெளியில் நின்று அவ்வாறு ஒவ்வொரு கதவையும் சாத்தியதாகத் தோன்றியது. ஷண்முகவடிவு தனது அக்காளைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலிலும், மன வெழுச்சியிலும் கதவுகள் மூடப்பட்டதைக் கவனிக்கவேயில்லை. அவளோடு இருந்த ஸ்திரீ அவளோடு பேசியவண்ணம் தனது கடைக் கண்ணால் கதவுகள் மூடப்பட்டதைப் பார்த்துக் கொண்டே இருந்து கடைசியில் எழுந்து, ‘அம்மா ஷண்முகவடிவூ! இந்த ஹேமாபாயி போய் அரைநாழிகை இருக்கலாம்; இன்னும் திரும்பி வராததைப் பார்த்தால் வழி தவறி எங்கேயோ போய்த் தடுமாறுகிறாள் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. அந்த அம்மாள் கமலத்தைக் காணவில்லை போலிருக்கிறது. நீ இங்கேயே இரு. நான் போய்க் கமலத்தை அழைத்துக்கொண்டு வருகிறேன்’ என்று கூறியவண்ணம் ஷண்முகவடிவின் மறுமொழியை எதிர்பாராமல் அவ்விடத்தை விட்டு விசையாக நடந்து, திறந்து விடப்பட்டிருந்த வாசற்படியை நோக்கிச் சென்றாள். அவள் அவ்வாறு சென்ற காலத்தில் அவளது மடியிலிருந்து ஒரு கடிதம் நழுவிக் கீழே வீழ்ந்தது. அதை அவள் கவனிக்காதவள் போல் அப்பால் நடந்தாள். அதைக் கவனித்த ஷண்முகவடிவு, ‘அம்மா! உங்கள் மடியிலிருந்து ஏதோ ஒரு கடிதம் கீழே விழுந்துவிட்டது; அதை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றாள்.

அதற்குள் வாசற் கதவண்டை போய்விட்ட அந்த ஸ்திரீ திரும்பி நின்று, ‘அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்துவிட்டு நீ