பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 13 யோக்கியமான குடும்ப ஸ்திரீகள் செய்யத்தகாத காரியங்களை எல்லாம் செய்யும் படி வற்புறுத்தி அதட்டி மிரட்டிப் பல வகையில் வதைத்தாராம். அவரிடம் ஒரு rணநேரம் இருப்பதும் எமவேதனையாக இருந்ததாம். அதனால் இந்த அம்மாள் தம்முடைய மனசுக்கு விரோதமாகவே அவருக்கு துரோகம் செய்ய நேர்ந்ததாம்- என்றார்.

இன்ஸ்பெக்டர்:- ஆம். அந்த மனிதரும் நிரம்பவும் மூர்க்க குணமுடைய மனிதர்தான். அவருடைய சங்கதியை நான் பல தடவைகளில் நேரில் கண்டு கவனித்திருக்கிறேன். அந்த மனிதரும் துஷ்ட மனிதர்; இந்த அம்மாளும் சபல புத்தி உடையவள். இல்லாவிட்டால் புருஷன் இருக்கையிலேயே இன்னொரு புருஷன்மேல் நாட்டம் செல்லுமா? இந்த அம்மாளுடைய அப்படிப்பட்ட நடத்தையைக் கண்டு எந்தப் புருஷன்தான் பொறுத்துக் கொண்டிருப்பான். அவராவது இவ்வளவோடு விட்டார்; மற்றவர்கள் இந்த அம்மாளைக் கொன்று போட்டிருப்பார்கள். அது எப்படியாவது போகட்டும். நமக்கும் அதற்கும் இப்போது யாதொரு சம்பந்தமுமில்லை. ஆகையால், இவர்களுடைய குடும் பச் சண்டையையும் இதையும் நாம் இப்போது சம்பந்தப்படுத்துவது நியாயமல்ல. ஆகையால், நாம் இது சம்பந்தப்பட்டவரையில் இந்த அம்மாளின்மேல் ஏதாவது குற்றமிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு அதோடு விசாரணையை நிறுத்திக் கொள்வோம். இதுவரையில் நாம் பார்த்தமட்டிலும், இந்த அம்மாள் சொன்னதற்கு அனுசரணையாகவே எல்லா விஷயங்களும் இருக்கின்றன. வைத்தியர்கள் பிரேதத்தைச் சோதனைசெய்து பார்த்து, இந்த அம்மாளுடைய சொல்லை ஆமோதித்து விடுவார்களானால், அதுவே போதுமானது. இந்த அம்மாள் பேரில் யாதொரு வழக்கும் இல்லையென்றும், இனி இதைப் பற்றிக் கவலையுறாமல் சுயேச்சையாக இருக்கலாமென்றும், நான் இப்போதே நேரில் சொல்லிவிடுகிறேன். என்றார்.