பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44-வது அதிகாரம்

நீலமேகம்பிள்ளையின் கலவரம்

ஷெண்முகவடிவு திருவாரூரிலிருந்து கோலாப்பூருக்குச் சென்ற போது அவளுக்குத் துணையாக கலியாண சுந்தரத்தின் வேலைக்காரியும் கூடவே தொடர்ந்து சென்றாள் என்பது முன்னரே சொல்லப்பட்டது அல்லவா. அவள் கோலாப்பூரில் நோய் கொண்டு சத்திரத்தில் படுத்திருந்த காலத்தில், ஷண்முகவடிவு அம்மணிபாயியின் வஞ்சக வலையில் பட்டு போலீஸ் கமிஷனரது ஜாகைக்கும் சிறைச்சாலைக்கும்போய், கலியாண சுந்தரத்தைப் பற்றிய விபரீதமான செய்திகளை அறிந்து கொண்டு திரும்பி வந்தவள், அந்த வேலைக்காரி தனது எஜமானனான கலியாணசுந்தரத்தின் இடத்தில் ஆழ்ந்த அன்பும் அபிமானமும் கொண்டவள் ஆதலால், அவனைப் பற்றிய விபரீத விஷயங்களை அவளிடம் சொல்வது சரியல்லவென்று நினைத்து, அவளிடம் உண்மையை வெளியிடாமல் மறைத்து, தாம் கோரி வந்த காரியம் நிறைவேறிவிட்டது என்றும், தாம் திரும்பி ஊருக்குப் போக வேண்டுமென்றும் கூறினாள். ஆதலால், வேலைக்காரி கலியாண சுந்தரத்தைப் பற்றி சிறிதும் சந்தேகம் கொள்ளாதிருந்தாள். அம்மணிபாயி அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு தஞ்சைக்கு வந்தபிறகு, ஷண்முகவடிவை மருங்காபுரி ஜெமீந்தாரது மாளிகையில் கொண்டுபோய் விட்ட காலத்தில், அந்த வேலைக்காரி தேக அசெளக்கியத் தோடு அம்மணி பாயியின் வீட்டில் படுத்திருந்தாள். அவ்வாறு படுத்திருந்தவள் ஐந்தாறு தினங்களில் செளக்கியம் அடைந்து, தன்னையும் ஷண்முக வடிவினிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் படி அம் மணி பாயிடம் கேட்டுக் கொள்ள அம்மணிபாயி, ஷண்முகவடிவு சோமசுந்தரம்பிள்ளையின் வீட்டிலுள்ள தனது அக்காளிடம்