பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 169 அவ்வாறு வந்தவள் வேறே பல இடங்களுக்குப் போய் சோமசுந்தரம் பிள்ளையைப் பற்றி விசாரித்திருக்க வேண்டுமென்றும் அப்போது யாராகிலும் அவளை வஞ்சித்து, தாமே சோமசுந்தரம் பிள்ளையென்று பொய் சொல்லி ஏதோ துர்நினைவோடு அவளை ஏமாற்றி இருக்க வேண்டுமென்றும், ஷண்முக வடிவும் அவ்விடத்திற்கே போய்ச் சேர்ந்திருக்க வேண்டுமென்றும் நீலமேகம்பிள்ளை ஒருவாறு நிச்சயித்துக் கொண்டார். அவரது மனதில் கோடானு கோடி எண்ணங்களும் சந்தேகங்களும் தோன்றின. பெண்கள் இருவரும் உயிருடன் இருக்கிறார்களோ என்றும் அப்படி இருந்தாலும் துன் மார்க்கத்தில் செலுத்தப்படாமல் பரிசுத்தமாக இருக்கிறார்களோ என்றும் அவர் நினைத்துப் பெரிதும் கவலை கொண்டு, தாம் உடனே தஞ்சைக்கு வந்து அவர்கள் இருக்கும் இடத்திற்குப் போய் அவர்களைப் பார்த்து அவர்களது பிறப்பின் ரகசியத்தை வெளியிட்டுத் தமது மாளிகைக்கு அழைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவலும் உறுதியும் கொண்டவராய் உடனே திருவாரூரை விட்டுப் புறப்பட்டார். அவர் ஷண்முக வடிவைப் பற்றி அதிக விவரம் எதுவும் தெரிந்து கொள்ளா விட்டாலும், அவள் கலியாணசுந்தரம் என்ற ஒரு யெளவனப் புருஷனைக் கலியாணம் செய்துகொள்ளத் தீர்மானம் ஆகி இருக்கிற தென்பதையும், அவன் ஏதோ அவசர காரியமாகப் பூனாவுக்குப் போயிருக்கிறான் என்பதையும், அவனுக்குக் கோலாப்பூரில் நேர்ந்த ஏதோ அபாயத்தைக் கருதி அவள் அவனது வேலைக்காரியோடு அந்த ஊருக்குப் போய் சமீப காலத்திலேதான்.தஞ்சைக்குத் திரும்பிவந்து தனது அக்காளிருந்த இடத்தை அடைந்தாள் என்பதையும் அறிந்துகொண்டார். ஆகவே கலியாணசுந்தரத்தின் வேலைக்காரி தம் மோடு தஞ்சைக்கு வந்தால் அவர்கள் இறங்கியிருந்த இடம் முதலிய வற்றைக் காட்ட அவள் உதவியாய் இருப்பாளென்று நினைத்தவராய், நீலமேகம்பிள்ளை அவளையும் தம்மோடு அழைத்துக் கொண்டு, சிவபாக்கியம் முத்தம்மாள் ஆகிய