பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பூர்ணசந்திரோதயம் - 5

கருப்பாயி, ‘இல்லை, இல்லை. கமலத்தம்மாள் சக்கா நாயக்கர் தெரு 13வது வீட்டில் இருப்பதாக நாங்கள் திருவாரூரிலிருந்து கோலாப்பூருக்குப் புறப்பட்டுப்போவதற்கு முன்னிருந்தே ஷண்முகவடிவம்மாள் சொல்லிக் கொண்டி ருந்தார்கள். அதுவுமன்றி, நாங்கள் மூன்று பேரும் இந்த ஊருக்கு வந்தவுடனே, எங்களை அழைத்து வந்த அம்மாள் கமலத்தம்மாள் இருக்கும் இடம் எதுவென்று கேட்டதற்கும் ஷண்முகவடிவம்மாள் அந்த விலாசத்தைச் சொன்னார்கள். சரியென்று அந்த அம்மாள் அழைத்துக்கொண்டு போனார்கள். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அதைப்பற்றி கொஞ்சமும் சந்தேகிக்கவே இடமில்லை’ என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் கூறினாள்.

அதைக்கேட்ட நீலமேகம்பிள்ளை, ‘அப்படியானால் நீங்கள் இந்த வீட்டில் வந்து தங்கியிருந்தீர்கள் என்பதாவது தப்பாக இருக்க வேண்டும். இந்த ஊரில் இதைப் போல எத்தனையோ வீடுகள் இருக்கின்றன. அதனால் நீ இந்த வீட்டில் இருந்ததாகச் சொல்வது பிசகாயிருக்க வேண்டும்” என்றார்.

கருப்பாயி முற்றிலும் கலக்கமடைந்து, ‘இல்லை, இல்லை, எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இதே வீட்டில் தான்நாங்கள் வந்து தங்கினோம்; நான் வண்டியிலிருந்து கீழே இறங்கும் போது, கீழே கூராக நீட்டிக்கொண்டிருந்த கப்பிக்கல் என்காலில் குத்தியது. அந்தக் கல் கூட இதோ இருக்கிறதைப் பாருங்கள்’

எனறாள.

அதைக்கேட்ட நீலமேகம்பிள்ளை அதற்குமேல் எவ்வித ஆட்சேபனையும் சொல்லமாட்டாமல் தயங்கி முற்றிலும் குழப்பமும் கலக்கமும் அடைந்தவராய், ‘இது பெருத்த குளறலாக இருக்கிறது. சரி; எல்லாவற்றிற்கும் விசாரித்துப் பார்ப்போம். கதவு மூடி உள்பக்கத்தில் தாளிடப்பட்டிருக்கிறது போலிருக்கிறது. கதவைத் தட்டு, பார்க்கலாம் ‘ என்றார். உடனே வேலைக்காரி கதவண்டை போய் நின்று, ‘அம்மா!