பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பூர்ணசந்திரோதயம்-5

அவள் சொன்ன சொற்களைக்கேட்ட, கருப்பாயியும் நீல மேகம் பிள்ளையும் அப்படியே ஸ்தம்பித்துப் போயினர்.

உடனே கருப்பாயி, ‘அம்மா! என்னுடைய அடையாளம் உங்களுக்குத் தெரியவில்லையா? சுமார் 25 தினங்களுக்கு முன் நானும் நீங்களும் ஷண்முகவடிவென்ற இன்னொரு அம்மாளும் கோலாப்பூரிலிருந்து இங்கே வரவில்லையா? அந்த அம்மாளை நீங்கள் கமலத்தம்மாளுடைய ஜாகைக்கு அழைத்துக்கொண்டு போகவில்லையா? அப்போது நான் நோயாக இருந்தேன். ஆகையால் என்னை நீங்கள் ஐந்தாறு தினம் வரையில் இங்கே வைத்திருந்து சவரக்ஷணை செய்து அனுப்பவில்லையா?” என்றாள்.

உடனே அம்மனிபாயி, “என்ன ஆச்சரியம் இது? உனக்கு பைத்தியம் கியித்தியம் ஏதாவது உண்டா? நானாவது உங்களோடு கோலாப்பூரிலிருந்து வருகிறதாவது? உங்களை எங்கள் வீட்டில் வைத்து சவரகழிக்கிறதாவது? நான் இந்த ஊர் அரண்மனையில் பெரிய மகாராணியின் அந்தப்புரத்தில் உத்தியோகம் பார்க்கிறவள் அல்லவா? அவர்களைவிட்டு ஒரு கrணநேரம் கூட நான் எங்கேயும்போகமுடியாதே. என் மகன் இந்த வீட்டில் இருக்கிறான். அவனைப் பார்த்துவிட்டுப் போகவேண்டுமென்று நான் மகாராணியிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு இன்று காலையிலேதான் இங்கே வந்தேன். கோலாப்பூர் எந்தத் திக்கில் இருக்கிறதென்பதே எனக்குத் தெரியாது. உன்னையும் நான் இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். வேறே யாராவது என்னைப் போலவே இருக்கிறாளோ என்னவோ, நீ ஆள் மாறாட்டமாகப் பேசுகிறாய் போலிருக்கிறது” என்று அழுத்தமாகவும் ஒன்றையும் அறியாத பரிசுத்தமான மனுஷி போலவும் பேசினாள்.

அதைக்கேட்ட கருப்பாயி முற்றிலும் கலக்கமும் திகைப்பும்

அடைந்து தான் காண்பது கனவோ என்று சந்தேகித்து சிறிது நேரம் தயங்கி நின்றபின், ‘அம்மா! உங்களைப் போல வேறே