பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 175 எத்தனையோ பேர் இருப்பார்கள் என்று நீங்கள் சொல்லுகிறீர்களே; அது நிஜமே. ஆனால், இதே வீட்டுக்கு நாங்கள் வந்ததாக நன்றாய் ஞாபகம் இருக்கிறதே’ என்றாள்.

அம்மணிபாயி, “ஒரு மனிதரைப் போல பல மனிதர் இருக்கையில் ஒரு வீட்டைப் போல வேறே பல வீடுகள் இருப்பது ஆச்சரியமாகுமா?” என்றாள்.

கருப்பாயி, “இந்த வீட்டைப் போல வேறே வீடுகள் இருக்கலாம் என்பதும் நிஜமானாலும் வீடும் மனிதரும் ஒரே சந்தர்ப்பத்தில் ஒத்துக்கொள்வதென்றால், அது சாத்தியமான விஷயமா?’ என்றாள்.

அதைக் கேட்ட அம் மணிபாயி நிரம் பவும் கோபம் கொண்டவளாய்க் கடுகடுத்த முகத்தோடு ஆத்திரமாகப் பேசத் தொடங்கி, ‘அப்படியானால், உனக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டுமென்பதே உறுதிப்படுகிறது. நீ குறிக்கும் மனுஷி நானல்ல என்று நான் தக்க காரணத் தோடு சொல்லுகிறேன். அதை நீ கவனிக்காமல் நீ சொல்வதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டே போகிறாயே! வீடும் மனிதரும், ஒற்றுமையாக இருக்கிறதென்று நீ பிடிவாதமாகச் சொல்வதைப் பார்த்தால் உன் கண்பார்வையில் ஏதோ களங்கம் ஏற்பட்டிருக்க வேண்டுமேயன்றி வேறல்ல. அரைகுறையான திருஷ்டிக்கு எல்லாவீடும் ஒன்றுபோலவே இருக்கும். எல்லா மனிதரும் ஒரே மாதிரியே காணப்படுவார்கள். ஒரு வீட்டுக்கும் இன்னொன்றுக்கும், ஒரு மனிதருக்கும் இன்னொருவருக்கும் உள்ள வித்தியாசம் சொற்பமாக இருந்து, கண் திருஷ்டியும் கொஞ்சம் மங்கலாக இருந்தால், வேறுபாடு எப்படித் தெரியப் போகிறது. ஆகையால், இதற்கு உன் கண்களே ஜெவாப்தாரி யென்று நினைக்கிறேன். இன்னமும் உனக்குச் சந்தேகம் தீராமலிருந்தால் நான் நாளையதினம் காலையில் இங்கேயிருந்து புறப் பட்டு அரண்மனைக்குப் போகும்போது என்னோடு கூடவே வந்தால், நான் கோலாப்பூருக்கு எப்போதாவது ., V-12